பக்கம்:நாகப்பட்டினம்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கள் நாகை 193

"உற்றவர்க் குறுப்பறித் தெரியின்க்ண் உய்த்தலை அன்ன தீமை செய்தோர்க்கும் ஒத்த மனத்தராம் நற்றவர்க்கிடமாகி நின்றது நாகையே" (20) என்று பாடப்பெற்றது. "இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும் புணரின் வெகுளாமை நன்று" என்னும் வள்ளுவப் பெருந் தகை வாய்மொழிக்கு இலக்கியமானவர் நாகை மக்கள். -

காத்தான் ン -

மேற்கண்ட குறளுக்கு முன்பு உள்ள பாடல் 12ஆம் நூற்றாண் டிற்கு முந்தியது. இஃது புத்தத் துறவியாரையும் குறிக்கலாம். நகரத்து நல்லவரையும் குறிக்கலாம். பெருங்கொடை வள்ளல்களைப் பெற்றது நாகை நகரம். அவருள் ஒருவன் காத்தான் என்னும் வருண குலாதித்தன். காத்தான் என்னும் பெயரே மக்களைப் பசியினின்றும் வறுமையினின்றும் காத்தவன் என்று காட்டுகிறது. இவன் இள வலும் காத்தான் என்று சிறப்பிக்கப்பட்டவன். வருணகுலாதித்தன், வருணகுலத்தார் என்ப்படும் மீனவ குலத்தினன். திருமலை ராயனால் பாராட்டப் பெற்றுத் திருமலராய வருணகுலாதித்தன் எனப் பெற்றவன். இவன் வருணகுலாதித்த அச்சுதராயன் எனச் சிறப்பிக்கப் பெற்றவன். முத்தமிழ்ப் புலமையுடைய புரவலன். மீனவர் குலத்து மன்னன். நிலைபெற்ற பெருஞ்செல்வன்.

"கார்மதித்த நற்கொடையான்” (21) என்று பாடப்பெற்றவன். நாகையில் மழையின்மையால் மக்கள் வாடியபோது இவன் கஞ்சித் தொட்டிகள் அமைத்தவன். நிலையாக நாள்தோறும் உண்வு வழங்கும் சத்திரம் ஒன்று கட்டியவன். அஃது இன்றும் காத்தான் சத்திரம் என்ற பெயரளவில் உள்ளது. கவி காளமேகம் இச்சத்திரத்தில் உணவுண்டுள்ளார். காத்தான் செட்டி என்னும் குடிப்பெயராலும் இவன் குறிக்கப் பெற்றான். நற் செயலைப் போற்றும் நற்பண்புகளைக் கொண்டவர் நாகையர். நலஞ் செய்த காத்தான் பெயரால் இவன் சத்திரத்திற்குச் செல்லும் வழியைச் சொல்வதுபோல் அவ்வழித் தெருவிற்குக் காத்தான் செட்டித் தெரு என்று பெயரிட்டு அழைக்கின்றனர். 「5T、I比.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/211&oldid=585092" இலிருந்து மீள்விக்கப்பட்டது