பக்கம்:நாகப்பட்டினம்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 நாகபட்டினம்

செட்டிப் பெருமக்கள்

நாகை நகர மக்களில் செட்டியார்களுக்கு நல்ல பங்கு உண்டு; செட்டியார் வணிகச் செட்டிமார், சேனைக் கொண்ட செட்டிமார் முதலிய பலவகையினர். இவர்தம் தொழில் பெரும்பகுதி வணிகமே. நாகை வளமான வணிக நகரமாகவும் திகழ்வதைப் பயன்படுத்தித் தமிழகத்துச் செட்டிமார் நாகை எல்லைக்கு வந்து குடிய்மர்ந்தனர். இன்றும் செட்டிச்சேரி உள்ளது. நகரத்துள்ளும் நல்லிடம் பெற்றனர். பெருவணிகம் செய்தனர். - வேளாள மக்களும் காளமேகமும்

காளமேகப் புலவர் நாகைக்கு வந்தபோது ஒரு புகழ்ப் பாடல் பெற செட்டிமார் விரும்பினர். அவரை அணுகி 1000 பொற்காசுகள் வழங்கி நாகை நகரத்தைச் சிறப்பித்துப் பாட வேண்டினர்.

தன்னுணர்வால் பாடும் இயல்புள்ள காளமேகம் பணத்தால் பாடல் பெற வந்தவரை வெறுத்த்வராகப் பாடத் தொடங்கினர்.

பாடல் பெற விரும்பி வந்தோர் அப்போது வெங்காயம் உண்டு வந்திருப்பர் போலும். அதனால் -

"உள்ளிநாறும் வாயரும் உவட்டெழுந்த தலையரும்" என்று பாடத் தொடங்க, செட்டிமார் அவரை அமைதிப்படுத்திப் பணிந்து வேண்டினர். பின்னர் அவர் பலதிறத்து வணிகத்தையும் பாராட்டி,

"அஞ்சுவண்ண மும்தழைத்து அறத்தின்வண்ண மாணஊர்" என்று பாடினர். இவ்வரலாற்றுச் செய்தியைச் சோழமண்டலம் சதகம் கூறுகிறது. திருமேனி செட்டித் தெரு

திருமேனி செட்டியார் என்னும் நாகைச் செட்டியார் நாகையில் மட்டுமன்றி பிற ஊர்களிலும் அறங்கள் செய்தனர். மராட்டிய மன்னன் துளசா காலத்தில் 1767இல் திருமுல்லைவாயில் முல்லைநாதர் கோயில் திருப்பணி தொடங்கியது. இதற்குப் பல வணிகரும் உதவினர். இவ்வுதவி பற்றிய விவரம் துளசா காலத்துச் செப்பேடு ஒன்றில் பதியப்பட்டுள்ளது. அதில், -

"பிற்றார் நாகூர் சிவந்தலிங்க செட்டியார் நாகப்பட்டண திருமேனி செட்டியார்" (22) எனும் இருவர் வருவாயில் பங்காக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/212&oldid=585093" இலிருந்து மீள்விக்கப்பட்டது