பக்கம்:நாகப்பட்டினம்.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 நாகபட்டினம்

பெரிய கோயிலாகிய இக்காரோணர் கோயில் கோயிலுக்குரிய நிறைவான அமைப்புகளைக் கொண்டது.இஃது ஒரு கற்றளி (கல் கோயில்). கோபுரவாயில், நந்தி, பலிபீடம், கொடிமரம், மண்டபம், திருச்சுற்றுக்கள். கருவறை, விமானம் என நிறைந்தது. கோயிலுக் குள்ளேயே திருக்குளம் தேவதீர்த்தம் என்னும் பெயரில் உள்ளது. இங்கு விசுவநாதர் கோயிலும் அழகிய முத்தி மண்டபமும் உள்ளன. முத்தி மண்டபம் கோயிலின் ஒரு சிறப்பு. - இந்நாட்டில் காசி, காஞ்சி, நாகை என்னும் மூன்று திருநகர் களில்தாம் முத்தி மண்டபங்கள் உள்ளன. நாகை முத்தி மண்டபம் பட்டி மண்டபமாகவும் பல நூல்கள் அரங்கேறும் களமாகவும் உள்ளது.

பெரிய கோயிலின் தென்மேற்கு மூலையில் வெளியிலிருந்து கொணர்ந்து அமைக்கப்பட்ட மூலவரைக் கொண்ட கோயில் ஒன்று எழுந்துள்ளது. நகரின் தென்மேற்கு மூலையில் பழைய சிந்து ஆற்றங்கரையில் கார்முகேசர் கோயிலென்றொரு கோயில் இருந்தது. ஆலந்துக்காரர் அவ்விடம் தமக்கு வேண்டியிருந்ததால் அக்கோயிலை அப்புறப்படுத்தினர். அங்கிருந்த மூலவரையும் அணுக்கத் தெய்வங் களையும் இங்குக் கொணர்ந்து தனிக் கோயில் அமைத்தனர். நகரின் தென்மேற்கு மூலையிலிருந்து வந்ததை இக்கோயிலின் தென்மேற்கு மூலையில் அமைத்ததும் ஒரு பொருத்தமாகும். கார்முகேசர் முன்னிருந்த இடத்தில் ஒரு பிள்ளையார் கோயில் மட்டும் உள்ளது. அவ்விடம் சம்பங்கோரை நிறைந்த இடமாகையால் சம்பங்காட்டுப் பிள்ளையார் எனப்பட்டு அஃதே சம்மட்டிப் பிள்ளையார் ஆயிற்றாம். -

காரோணர் கோயில் நுழைவாயிலில் நாகாபரணப் பிள்ளையார் திருவுருவம் உள்ளது. இதன் தலை மேல் ஐந்து தலைப்பாம்புப் படம் விரித்து நிற்கிறது. இரண்டாவது வாயிலின் தென்புறம் முருகன் இடம் பெற்றுள்ளான். இம்முருகனுக்கு இங்கு 'மயிலேறு சேவகன் என்னும் சிறப்புப் பெயர் உண்டு. இம்முருகனையே அருணகிரியார் ஆறு பாடல்களில் போற்றியுள்ளார். -

அரிமா ஊர்தியில் ஏறிய ஐந்து முகப் பிள்ளையாரையும் இங்குக் &s1&stsūstLB.

இக்கோயிலில் அனைத்துக் கடவுளர்க்கும் திருவுருவங்கள் உள்ளன. உலகம் அழிந்த ஊழிக்காலத்தில் அனைத்துக் கடவுளரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/254&oldid=585135" இலிருந்து மீள்விக்கப்பட்டது