பக்கம்:நாகப்பட்டினம்.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290 நாகபட்டினம்

ஏசுகிறித்து பிறந்தநாள் கிறித்தவரது சமய விழா என்றாலும் ఆ బ్రీ உலக வரலாற்றுப் பதிவு நாளாயிற்று. உலகத்தில் வர லாற்றுக் கால அளவு இந்த நாளை வைத்தே அனைவராலும் வழங்கப்பெறுகிறது. கிறித்து (பிறந்த) பின் கி.பி. என்றும். கிறித்து (பிறப்பதற்கு) முன் கி.மு. என்றும் உலக ஒருமைப்பாட்டு ஆண்டாக விளங்குகிறது.

"கிறித்துமசு கிறித்து பெயரால் அமைந்த கிறித்துவ சமய விழா ஆயினும் இந்நாள் வாழ்த்தைப் பிற சமயத்தினரும் ஒருவருக்குஒருவர் கிறித்துமசு வாழ்த்து என்று வழங்கி மகிழ்கின்றனர். -

பொதுவில் நாகையிலும் கிறித்துவம் ஐந்து முனைகளில் இடம் பெற்றுக் கிறித்துவத்தைப் பெருக்கியதுடன் தொடக்கம் முதலாகவே கல்வி நிலையங்களை ஏற்படுத்திக் கல்விப்பணி செய்து வருகின்றது. -

கிறித்துவத்தால் நாகைக்கு ஒரு பெருமையும் வளமும் உண்டென்றால் அது வேளாங்கன்னியால் நேர்வதாகும்.

வேளாங்கன்னி

நாகை தனக்குரிய சிறப்புகளாலும் சூழ்ந்துள்ள துணைகளாலும் சிறப்புற்றது. மேற்கே சைவச் சிக்கல் சிங்காரவேலரால் சிறப்பு: வடக்கே இசுலாமிய நாகூர் ஆண்டவரால் சிறப்பு: இவைபோன்று தெற்கே கிறித்துவ வேளாங்கன்னியால் சிறப்பு. கிழக்கு வங்கக் கடலால் வளமான சிறப்பு. 'கண்ணி அன்று

வேளாங்கன்னி என்னும் ஊர் நாகைக்குத் தெற்கில் 10 கி.மீ. தொலைவில் திருத்துறைப்பூண்டிச் சாலையில் உள்ளது. அங்கமைந்த கிறித்துவக் கோயில் உரோமன் கத்தோலிக்கச் சார்புடையது. வங்கக் கடற்கரையில் சிறிய குப்பமாக இருந்த அப்பகுதி கன்னி மரியன்னையால் வேளாங்கன்னி ஆயிற்று.

ஏசுவின் அன்னை கன்னியாகவே ஏசுவைப் பெற்றுச் சிறப்புற்றார். கன்னி மரியாள் எனப்பெற்றார். கடவுளின் அருளாளர் நிலையில் தொழுகைக்கான அன்னையாகக் கிறித்து வர்களால் போற்றப்பெறுகிறார். இவ்வன்னையாம் கன்னி பல்வகை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/308&oldid=585189" இலிருந்து மீள்விக்கப்பட்டது