பக்கம்:நாகப்பட்டினம்.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வணிகம், தொழில் நாகை 299

சேர்ந்தன என்பதை "யாவும் தருதலின்" என்றார். அலைபோல, யானைகளையும் குதிரைகளையும் கூட்டமாக இறக்கியதையும் குறித்துள்ளார். தொடர்ந்து, -

"பீடு தங்கிய பல்பொருள் மாந்தர்கள் பெருகி" என்றது வணிகரையே குறிக்கும். 'வாணிபத்திற்குப் பல்வகை உலகப் பொருள்களையும் கொணர்ந்தனர் என்றும் அத்தகைய உலகவணிகர்களுடன் நகர் வாணிபரும் பெருகினர் என்றும் பாடியமை வெற்று வண்ணனை அன்று. உலகப் பொருள்க ளெல்லாம் காணப்பட்டமையால் உலகைக் காணும் கண்ணாடி போல் இருந்தது' என்றதும் உண்மை வண்ணனையாகும்.

நாகையில் பர்மா 1476 இல் பர்மாவிலிருந்து இலங்கை சென்ற வணிகர்களும், கடற் பயணிகளும் நாகையில் வணிகம் செய்தும் நகரைக் கண்டும் சென்றனர். இதனைப் பர்மா நாட்டுக் கல்யாணி நகர்க் கல்வெட்டு சொல்கிறது.

1478 இல் பர்மா அரசர் ஒருவர் தம்மசெட்டி' என்றொருவரை அனுப்பினார். அவர் பெயரில் தம்ம" என்றிருப்பதால் அவர் புத்த சமயத்தவராகலாம். செட்டி' என்பது அவர் வணிகர் என்பதைக் காட்டுகிறது. இஃதும் கல்யாணிக் கல்வெட்டில் காணப்படுவது. இது பாளிமொழிக் கல்வெட்டு. உண்மை வண்ணனை

15ஆம் நூற்றாண்டில் காளமேகம் பாடியதாகவுள்ள பாடல் ஒன்று நாகையில் நான்கு திக்கிலிருந்தும் இறக்குமதியான பொருள்களைக் காட்டியுள்ளது.

"குடக்கினில் துரங்கமும் வடக்கினில் கலிங்கமும்

குணக்கினில் பசும்பொனும் குனித்ததெற்கில் ஆரமும் அடிப்பரப் புடைக்கலத்து அனேகவண்ண மாகவந்(து)

அஞ்சுவண்ண மும்தழைத்து அறத்தின்வண்ண மானஉஊல் (துரங்கம் - குதிரை. கலிங்கம் - ஆடை) என்னும் முதல் இரண்டடிகள் மேற்கில் மலையாளத்துக் கடற்கரை வழியான அரபு நாட்டுக் குதிரைகள் வந்து இறங்கியதையும், வடக்கே சீனாவிலிருந்து பட்டாடைகள் வந்திறங்கியதையும் கிழக்கு நாடுகளிலிருந்து பசும்பொன் வந்ததையும் தெற்கே பாண்டி நாட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/317&oldid=585198" இலிருந்து மீள்விக்கப்பட்டது