பக்கம்:நாகப்பட்டினம்.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்றவர் பயிலும் நாகை 333

கவித்திருமதி காளிமுத்து அம்மையார் புலமை மிக்கவர். இலக்கண இலக்கியங்களில் தேர்ந்தவர். கலிவெண்பாவைக் கண்ணிகளாகச் சுவைபட, ஆற்றொழுக்காகப் பாடும் ഖണ്ഡങ്ങഥ உள்ளவர். அகத்தியமும் தொல்காப்பியமும் அறிந்தவர். திருக்குறளை நன்கு கற்றவர். இனிய தமிழ்ச் சொற்களுடன் துடை (தொடை) போன்ற திரிபுச் சொற்களையும் வடசொற்களையும் கையாள்பவர். இவற்றை இவர் எழுதிய வருணகுலாதித்தன் உலா மடலில் காண்கிறோம். இந்நூலின் முதல் பதிப்பு 1775 இல் சந்திரசேகரப் பாவலராலும் இரண்டாவது பதிப்பு 1838இல் சரவணப் பெருமாள்' அய்யராலும் வெளிவந்தன. இரண்டாம் பதிப்பில் நூல் ஆசிரியர் பெயர் குறிக்கப் பெறவில்லை. ஆசிரியர் பற்றிய குழப்பத்தால் இவ்வாறு விட்டார் போலும்.

"மடல் என்பது சிற்றிலக்கிய வகையைச் சார்ந்தது. இது "உலாமடல்', "வளமடல்' என இருவகைப்படும். இந்நூல் "உலாமடல். காதலன் ஒருவன் கனவில் உலா போகிறான். சோலையில் ஒர் அழகியைக் காண்கிறான். அவள் மேல் தீரா அடிமைக் காதல் கொள்கிறான். அவள் நடந்தபோது மண்ணில் பதிந்த காலடிச் சுவடு ஒவ்வொன்றையும் தொட்டுக் கண்களிலே ஒற்றிக் கொள்கிறான். இதனை,

"மண்ணிலே தோயஅடி வைத்தசுவடு அத்தனையும் கண்ணிலே ஒற்றிஒற்றிக் காமுற்றேன்" என்று அவனே ஒலமிடுகிறான். இறுதியில் கண் விழித்தவன் அவளைக் காணாமல் கனவில் பார்த்த காலடிச் சுவட்டையும் தேடிக்காணாமல் மடல் ஏறுகிறான். தனக்குக் கிடைக்காத பெண் உருவத்தைத் துணியில் ஓவியமாகத் தீட்டி பனங்கறுக்கால செய்த குதிரை மீது ஏறி ஊரில் உலா வருவது போன்று பேசுவது மடல் ஏறல் எனப்பெறும்.

வருணகுலாதித்தன் உலா மடல் இவ்வமைப்பில் இந்நூல் சிறந்தது. இலக்கியப் புலவர்களது வழக்கமான பேச்சில் வெண்பாவுக்குப் புகழேந்தி, வசைக்குக் காளமேகம்...' என்பர். இதுபோல்.

1. இவ்விரண்டாம் பதிப்பை எனக்கு அன்புடன் உதவியவர் நாகைப் பெருமாள் கோவில் தெருவில் வாழ்ந்த திரு. அ. கோவிந்தசாமி என்பார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/351&oldid=585232" இலிருந்து மீள்விக்கப்பட்டது