பக்கம்:நாகப்பட்டினம்.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

334 நாகபட்டினம்

"வருணகுலாதித்தன் உலா மடலைப் போல் ஒரு மடலும், முக்கூடற் பள்ளைப்போல் ஒருபள்ளும், குற்றாலக் குறவஞ்சிபோல் ஒரு குறவஞ்சியும் தமிழில் (வேறு நூல்கள்) இல்லை" என்று பழமொழிபோல் பேசிக் கொள்வர். இதனாலும் இந்நூலின் சிறப்பை அறியலாம். - இன்பச் சுவையில் கனவில் காணப்பெற்ற தலைவி, அடி, பரடு, கணைக்கால் முதல், நெற்றி, கூந்தல்வரை அஃதாவது அடி முதல் முடி வரை 27 உறுப்புகளைச் சுவைபட வண்ணிக்கப்பெறுகிறாள்.

செந்தமிழையும் புலவர் மொழிகளையும் பல சுவைகளுக்கும் பெருமைகளுக்கும் உவமையாகக் காட்டியுள்ளார்.

"உடுக்கையிழந்தவன் கை போல" "காமம் உழந்து" என்னும் குறட்பாக்களை அப்படியே அமைத்துப் பாடியுள்ளார்.

ஒடும் ஆற்றைப் பாடும் கண்ணிகள் முடுகி ஓடும் ஆறு போன்று அந்த ஒசையுடன் உள்ளன. வாய்விட்டுப் படிக்க வேண்டும் போல் ஆர்வம் எழும். படித்தால் நாவை உலுக்கி நெளித்துப் புரட்டி உருட்டும். இந்நூல் வெண்பாவில் தனிச்சொல் பெற்ற கண்ணிகளாக 470 கண்ணிகளையும் முன்னே மூன்று வாழ்த்து வெண்பாக்களையும் கொண்டது. -

இடம் விரிவாவதைக் கருதி, சுவை சொட்டும் பகுதிகளை ஆர்வமுள்ளோர் நூலைத் தேடிப் பிடித்துச் சிவைக்கலாம் என்னும் துண்டுகோலுடன் நிறுத்த வேண்டியுள்ளது. காத்தான்

கற்ற நாகையராம் அம்மையார் தொடர்பில் வருணகுலாதித்தன் பற்றியும் காணவேண்டியுள்ளது. இவன் அவரால் பாடப்பெற்ற மடலின் பாட்டுடைத்தலைவன் என்பதால் மட்டும் அன்று: அஃதும் ஒரு சிறப்பே. இந்த ஆதித்தனும் கற்ற நாகையில் அவனை அம்மையாரே "முத்தமிழ்விரகன்" என்று சிறப்பித்துள்ளார். இயற்றமிழ், இசைத்தமிழ், கூத்துத்தமிழில் வல்லவனாகக் காண்கிறோம். இத்துடன் செந்தமிழ்ப் புலவர்களை உணர்ந்து போற்றியவன். இதனிலும் மேலாகத் தமிழ்ச்சங்கம் அமைத்தவன்.

மணிமுடியான அறமாக ஏழைகளுக்குச் சத்திரம் அமைத்துப் பசி போக்கியவன். காத்தான் சத்திரம் பற்றியும் காத்தான் செட்டித்தெரு' பற்றியும் அறிந்தோம். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/352&oldid=585233" இலிருந்து மீள்விக்கப்பட்டது