பக்கம்:நாகப்பட்டினம்.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்றவர் பயிலும் நாகை 347

பரப்பினார். யாழ்ப்பாணத்திலும் இவர்தம் நூலொன்று அரங் கேறியது. - -

நாகையில் சிறந்த வணிகராக இருந்த மதுரைப்பிள்ளை கூட்டிய பெரும்மன்றில் நாவலர் பட்டம் வழங்கப்பெற்றார். பெரும்புலவர் சோழவந்தான் அரசஞ்சண்முகனார் இவர்தம் இலக்கண இலக்கியப் புலமைய்ப் போற்றி எழுதினார். புலவர் குலமணி என்று பாராட்டப் பெற்றார்.

இவர் எழுதிய நூல்கள் 24, அவற்றுள் பொருத்த இலக்கணம் முதலிய இலக்கண நூல்களும், இலக்கியங்களும், உரைகளும், உரை நடை ஆக்க நூல்களும், சமய நூல்களாகச் சிற்றிலக்கியங்களும் உள்ளன. நாகூர் ஆண்டவர் வரலாறாக எழுதப்பட்ட 'கல்துல் கறா மத்து குறிப்பிடத்தக்க பெருநூல். அது 131 அத்தியாயங்களும் 576 பக்க அளவும் கொண்ட நூல். நாகூர் ஆண்டவர் வரலாற்றை நிறை வாகக் கூறுவது அந்நூல்.

‘புலவராற்றுப்படை' என்னும் அவர்தம் நூல் சங்க இலக் கியத்தில் பத்துப்பாட்டின் ஒரு பாட்டு போன்ற சிறப்புடையது. ឦសា எழுதிய அரபு - தமிழ் அகராதி குறிக்கத்தக்க தமிழ்ப் பணியாகும்.

நாகூர் முத்துப் புலவர் இயல்பான ஓட்டத்தில் செய்யுளியற்றும் புலமையாளர். தமிழ்த்திரு பாண்டித்துரை தேவர்.பால் பேரன்பு பூண்டு அவரால் போற்றப்பெற்றவர். அவர்மேல் 51 பாடல்களும் பல தனிப் பாடல்களும் பாடியுள்ளார். எமவாதம்

திரு இராசகோபால பிள்ளை என்பார் ஒரு நாகை எழுத்தாளர். இவர் எம வாதம் என்றொரு நூலை எழுதினார். இஃதொரு வழக்காடல் நூல், நாடக உருவில் அமைந்தது.

மார்க்கண்டேயருக்காகச் சிவபெருமான் காலனைக் (எமனை) காலால் உதைத்துச் சாய்த்தார். பின்னர் உயிர்பெற்ற எமன் தன்னைச் சிவபெருமான் உதைத்தது குற்றம்; உயிர் வாங்கும் என் கடமையைச் செய்யும் போது தடுத்ததால் குற்றம். எனவே, அவரை அறமன்றத்தில் குற்றக் கூண்டில் நிறுத்தி உசாவித் (விசாரித்து) தீர்ப்பு வழங்க வேண்டும். இவ்வாறு எமன், நாகை அறமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுக்கிறார். இவ்வாறு அமைக்கப்பெற்ற நூல் ‘எமவாதம் என்பது. இஃதொரு புதுமைப் படைப்பு: பட்டிமன்றப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/365&oldid=585246" இலிருந்து மீள்விக்கப்பட்டது