பக்கம்:நாகப்பட்டினம்.pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்று - நாளை - நாகை - 363

மாவட்டப் பிரிவுத் துறைகளாக ஆட்சித் துறை, காவல்துறை, கருவூலத் துறை, மண்டலப் போக்குவரத்துத் துறை, பதிவுத்துறை. மீன் வளர்ச்சித்துறை, மருத்துவத்துறை, திட்டத் (முதியோர் கல்வி) துறை ஆகியவற்றின் மாவட்ட அலுவலர்களையும் அலுவலகங் களையும் கொண்டுள்ளது.

உள்ளாட்சிகளாக 5 நகராட்சிகளைக் கொண்டுள்ளது. அவை நாகபட்டினம் நகராட்சி, திருவாரூர் நகராட்சி, மயிலாடுதுறை நகராட்சி, மன்னார்குடி நகராட்சி, திருத்துறைப்பூண்டி, நகராட்சி என்பன ஆகும்.

ஒரு நகரியத்தையும் (Town Ship) 19 ஊராட்சி. ஒன்றியங் களையும், 17 பேரூராட்சிகளையும் கொண்டுள்ளது.

பரப்பளவு, மக்கள் தொகை இவற்றில் தஞ்சாவூர் மாவட்டத்தை விடப் பெரியது. இதுபோன்றே பல அமைப்புகளிலும் நாகை தஞ்சையைவிட அதிக எண்ணிக்கை கொண்டதாக அமைந் துள்ளது.

போக்குவரத்திற்குரிய அரசின் சாலைகளில் மாநில நெடுஞ்சாலை 6 கிலோ மீட்டர், மாவட்ட நெடுஞ்சாலைகள் 883.8 கி.மீ., பிற மாவட்டச் சாலைகள் 1099 கி.மீ. நீளங்களில் அமைந்துள்ளன. தஞ்சாவூர் மாவட்டத்தைவிட நாகபட்டின மாவட்டம் 216 கி.மீ. அதிக நீள அளவைக் கொண்டதாகும்.

கண்டு மகிழத்தக்க இடங்களாக, பழைய தரங்கம்பாடிக் கோட்டை. புதிய பூம்புகார்ச் சிலப்பதிகாரக் கலைக்கூடம். கோடியக்கரை விலங்குகள் அடைக்கலக் களம், உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் அடைக்கலக்களம் ஆகியன உள்ளன.

வழிபாட்டிற்குரிய பெயர்பெற்ற பெரிய கோவில்களாக நாகபட்டினத் திருக்காரோணர் கோயில், நாக்கூர்த் தர்கா, வேளாங்கன்னி மாதாகோயில், சிக்கல் சிங்காரவேலர் கோயில் ஆகியவை உள்ளன." r

இது தனிப் புதுமாவட்டமாக மலர்ந்தபோது 7275 நலப்பணிகளும், 509 அடிக்கல் நாட்டல்களும் 881 அலுவலகப் புதுக்

1. இப்புள்ளி விவரங்கள் புதுமாவட்டத் திறப்பின்போது வெளியிடப்பட்ட அரசு அறிக்கை இதழிலிருந்து தொகுக்கப்பெற்றவை யாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/381&oldid=585266" இலிருந்து மீள்விக்கப்பட்டது