பக்கம்:நாகப்பட்டினம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. பெயர் பெற்ற நாகை

அ. பெயரும் புகழும் பெயர்பெற்ற நாகை என்றால் புகழ் பெற்ற நாகை என்றும் பொருள். என்றும் பொருள் என்றால் இப்பொருள் இரண்டாவது பொருள் என்று பொருள். ஒன்றிற்கோ ஒருவர்க்கோ சூட்டப்பெறும் பெயரையே முதலில் குறிக்கும். - .

பெயர் வேறு; புகழ் வேறு; பெயரால் புகழ் பெறலாம். பெயர் கொண்டவர் எல்லாரும் புகழ் பெறுபவர் அல்லர். நல்ல செயலாற்றி, பலருக்கும் பயன்பட்டு, ஊரார் உரையாடலில் பெயர் சொல்லப் பெற்று, அவையில் பேசப்பெற்று, ஏட்டில் எழுதப்பெற்று - இவையெல்லாம் சிறப்பாகவே அமைந்து நாட்டில் பாராட்டப் பெற்றால் அப்பெயர் புகழ் பெறும். .

"பெயர் பொறிக்கும் பேராண்மை" (1) என்றார் நாலடியார். பொறிக்கப்பெறும் பெயர்தான் புகழ். எனவே, பெயரால் ஆகிய பெயரே புகழ். புகழுக்கு ஆகுபெயரே பெயர். கலித்தொகைத் தோழி ஒருத்தி "பெரும் பெயர்மீளி"(2) என்று ஒரு காதல் தலைவனைக் குறித்தாள். இங்குப் பெயர் என்றதற்குப் புகழ்' என்றே பொருள். இவன் வீரத்தால் பெயர் பொறித்துப் புகழ் பெற்றவன். இத்தகைய வீரர் வீரத்துடன் இறப்பின் அவருக்குக் கல்நட்டு, அக்கல்லில், அம்

"மறவர் பெயரும் பீடும் எழுதிப்"(3) போற்றுவர். இவ்வடியிலும் மிெயர் வேறு. புகழ் வேறாகச் சுட்டப்பட்டிருப்பதை அறியலாம்.

பெறப்படும் புகழ் மாந்தர்க்கு மட்டும் அன்று, பொருள்களுக்கும் இடங்களுக்கும் உண்டு. இங்கு நாகை தன்பெயரால் பெற்ற புகழை விவரிக்கப் போவதில்லை. இந்நாகை - நாகர்பட்டினம் என்று தனக்குப் பெற்ற பெயரை - பெயர்களைப்பற்றி இங்குக் காணப் படுகிறது. -

ஊரோ, நாடோ பலவகையால் பெயர் சூட்டப்பெறும்; அல்லது `யல்பான வழக்களிலும் அமையும். பெரும்பகுதி காரணத்தாலே

பயர் பெறும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/60&oldid=584942" இலிருந்து மீள்விக்கப்பட்டது