பக்கம்:நாகப்பட்டினம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெயர் பெற்ற நாகை 43

பெயர்க் காரணம்

பொன்னை வடிக்கும் நாவல் மரங்கள் நிறைந்த சிறப்பால் இப்பெருநாடு நாவலந் தீவு எனப் பெயர் பெற்றது. வடமொழியில் சம்புத் தீவு எனப்பெற்றது (சம்பு-நாவல்). இது மரத்தால் ஒரு நாடு பெற்ற பெயர். மரத்தால் பெயர் பெற்ற ஊர்கள் பல. விலங்காற் பெயர் பெற்ற நாடுகள், ஊர்கள் உள்ளன. பலவகைகளில் பெயர் பெற்றவற்றில் மாந்தரால் பெயர் பெற்றமை மிகக் கவனிக்கத்தக்கது. தமிழ் மண்ணின் இடங்கள் அக்கால இயற் பெயர்களாகக் கருதப்பட்ட ஆதன், பூதன், பூவன் முதலியோரால் முறையே ஆதனுர் ஆதமங்கலம், ஆதங்குடி, பூதனூர், பூதமங்கலம், பூதங்குடி பூவனூர் பூவமங்கலம், பூவங்குடி எனப் பெயர் கொண்டன. வணிகப் பெயரான சாத்தனால் சாத்தனுர், சாத்தமங்கலம், சாத்தங்குடி நெய்யுந் தொழிற்பெயரான சாலியனால் சாலியனூர். சாலிய மங்கலம், சாலியங்குடி, புலமைப் பெருமக்களான கீரன், கூத்தன் முதலியோரால் கீரனூர், கீரமங்கலம், கீரன்குடி, கூத்தனூர் கூத்தமங்கலம் எனப் பெயர் கொண்டு விளங்குகின்றன.

பிறமண்ணிலும் அம்மண்ணைக் கண்டு சொன்னவரால் பெயர் பெற்றன. பல. கொலம்பசால் காணப்பட்ட கொலம்பியா அறிவோம். இதே கொலம்பசு முதன்முதலில் மேற்கே கண்ட நிலப்பகுதியை இந்தியா என்று கருதிச்சொன்னான். ஆனாலஃது இந்தியாஅன்டு: அது ஒரு புதுநிலம் என்று ஆய்ந்து சொன்னான் இத்தாலிய மாலுமி ஆமெரிகோ எனனும் பெயரினன், அவன் பெயரையே அம்மண் "அமெரிக்கா என்னும் பெயராகக் கொண்டு விளங்குகின்றது. பெயர் பெற்ற நாகை என்னும் இத்தொடரில் பெயர்ப்ெற்ற ஊர்களில் ஓர் ஊரே அடுத்தடுத்துப் பல பெயர்களையும் கொண்ட வரலாறு உண்டு.

"அரையம் என்பது ஒரு மலைப்பகுதி ஊர். அது சிற்றுாராய் இருந்து அதன் பக்கத்தே பேரூர் ஒன்று வளர்ந்ததால் சிற்றரையம், பேரரையம் எனப் பெயர்கள்கொண்டு, -

"இருபாற் பெயரிய உருகெழு மூதூர்'(4) என்று கபிலரால் பாடப்பெற்றது. இவ்வடியே ஒரெழுத்தும் மாறாத கபிலர் தொடராக மணிமேகலையில் ஆளப்பட்டது. அதன் பதிகத்தில் சம்பு என்னும் தெய்வம் சொல்லுவதாக அமைக்கப்பட்டுள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/61&oldid=584943" இலிருந்து மீள்விக்கப்பட்டது