பக்கம்:நாகப்பட்டினம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெயர் பெற்ற நாகை - 47

குறிக்கப்படும். முதல் இராசராசன் "முந்நீர்ப்பழந்தீவு பன்னி ராயிரமும் மாநக்கவாரமும்" வென்றடிப்படுத்தினான் என்றுள்ளது. இங்கு வாழ்மக்கள் நாகர்' எனப்படுவர். வடமொழில் நக்கர் அஃதாவது ஆடை உடுத்தாத - பிறந்தவாறு உருவினர் என்று குறிக்கப்படுவர். ஆனால், இவ்வகையினர் நகைக்கத்தக்க நக்கர். 18 தீவுகளில் ஒரு தீவில் தான் வாழ்ந்தனர். சாதுவன் ள்ன்னும் வணிகனால், -

"நக்க சாரணர் நாகர் வாழ்மலைப் பக்கம் சார்ந்தவர் பான்மையன்" - ஆயினன் (7) என்று மணிமேகலையில் குறிக்கப்பட்டுள்ளது. அந்நூலில் நாகநாட்டில் பல மன்னர் ஆண்டதையும் காணலாம்.

"ழ்ேநில மருங்கின் நாகநா டாளும் இருவர் மன்னவர்"(8) ஒரு புத்த பீடிகைக்கு உரிமை கொண்டாடிப் போரிட்டதைக் காண்கிறோம். அந்நூலே வளைவணன் என்றும் அரசன் பெயரையும் வாசமயிலை, பீலிவளை என்றும் அரச மகளிரையும் குறித்ததை முன்னர் கண்டோம். அம்மக்களை மங்கோலியர் வழியினர் என்பர். கிடைக்கின்ற குறிப்புகளைக் கொண்டு நோக்கினால், அம்மக்கள் பேரழகுடையவர் என்று உணரலாம். வளைவணன், மயிலை, பீலிவளை முதலிய தமிழச் சொற்களால் அவர்கள் தமிழறிந்தோர், அத்துடன் தமிழ் முன்னோர் வழியினர் என்று கொள்ளலாம். அன்னார் ஒரே தெய்வ வணக்கம் கொண்டிருந்தவர். ஒருவனுக்கு ஒருத்தி என்பதுடன் பல மனைவியர் முறையும் கொண்டிருந்தவர். அசோகர் காலத்தில் புத்தமதம் இந்திய மண்ணிலும் இலங்கை மண்ணிலும் வேரூன்றிப் பரவியபோது நாகரும் புத்த மதத்தவராயினர். இலங்கையுடன் தொடர்பு கொண்டிருந்ததும் இதற்கு அடிப்படையாயிற்று.

இ. பாம்புத் திசை திருப்பம் ஆனால், புத்த மதத்தை அழிக்கத் தொட்ங்கிய வைதிக சமயத்தவர் கண்ணில் நாகநாடு பட்டது. எதையும் சொல்லாலும் அதன் பொருளாலும் திசை திருப்பவதில் தேர்ந்த வடமொழியாளர், நாகர் என்பார் நாகப்பாம்பு வழியினர் - ஆதிசேடன் - வாசுகி வழியினர்

نتہ*

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/65&oldid=584947" இலிருந்து மீள்விக்கப்பட்டது