பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன் - 167

‘அறிவுடையோரின் பேச்சுகளை இகழ்வாகச் சுட்டிப் பேசுவான் புல்லறிவாளன்’ என்பது கருத்து.

322. அவ்வியம் இல்லார் அறத்தாறு உரைக்குங்கால்,

செவ்வியர் அல்லார் செவிகொடுத்தும் கேட்கலார், கல்வித்தோல் தின்னும் குணுங்கர்நாய் பாற்சோற்றின் செவ்வி கொளல்தேற்றா தாங்கு. - தோலை வாயினாலே கெளவித்தின்னும் இயல்பினை உடைய புலையருடைய நாயானது, பாலோடு கூடிய சோற்றினது நல்ல சுவையை அறிந்து கொள்ளுதலிலே தெளிவில்லாததாய் இருக்கும். அதைப்போலவே, பொறாமை முதலிய மனக்குற்றம் இல்லாத சான்றோர்கள் அறநெறியினை எடுத்துச் சொல்லுங் காலத்திலே, நற்குணமில்லாத புல்லறி வாளர்கள், அதனைக் காது கொடுத்துக் கேட்க மாட்டார்கள்.

‘புல்லறிவாளர், நல்ல நெறிகளிலே மனஞ்செலுத்த மாட்டார்கள்; புன்மையானவற்றிலேயே மனங்கொள்ளுவர் என்பது கருத்து.

323. இமைக்கும் அளவில்தம் இன்னுயிர்போம் ஆற்றை

எனைத்தானுந் தாங்கண் டிருந்தும்-தினைத்துணையும் நன்றி புரிகல்லா நாணின் மடமாக்கள் பொன்றிலென் பொன்றாக்கால் என்?

கண்ணிமைக்கின்ற அளவிலே தானே, தம்முடைய இனிய உயிரானது போய்விடும்படியான வழியுடைய தென்பதை எல்லாவகையானும் தாம் அறிந்திருந்தும், தினையளவேனும் நல்ல செய்கைகளைச் செய்தலில்லாத வெட்கமற்ற மட மனிதர்கள், இறந்தால்தான் என்ன? அன்றி, இறவாமல் இருந்தால்தான் என்ன? இரண்டும் உலகிற்கு ஒன்றேதான் என்பது முடிவு. -

‘புல்லறிவாளர் நன்றி புரிதலிலே மனஞ்செலுத்த மாட்டார் என்பது கருத்து. அவரால் உலகுக்கும் பயனில்லை; அவருக்கும் பயனில்லை என்பதும் சொல்லப் பட்டது.

324. உளநாள் சிலவால், உயிர்க்கேமம் இன்றால்;

ப்லர்மன்னும் தூற்றும் பழியால்; பலருள்ளும் கண்டாரோடு எல்லாம் நகாஅது, எவனொருவன் தண்டித் தனிப்பகை கோள்?