பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 - நாலடியார்-தெளிவுரை

வாழ்ந்திருக்கிற நாட்களோ மிகவும் சிலவாகும்; உயிர்க்கு உடலை விட்டுப் போகவிடாது காத்து நிற்கும் காவலும் யாதொன்றும் இல்லை; இந்த உலகத்திலே பல பேர்கள் வெளியிட்டுக் கூறுகின்ற பழிச்சொற்களும் மிகுதியாகும். இப்படியிருக்கவும், உலகத்திலுள்ள பல பேர்களுக்குள்ளும், காணப்படுகிற அனைவரோடும் எல்லாம் இனிதாகக் கூடி வாழ்ந்து மகிழாமல், ஒருவன், எவரோடும் கூடாமல் விலகி நின்று, தான் தனியாகவேயிருந்து பிறரோடு பகைமை பாராட்டுதல் எதற்காகவோ?

‘அப்படித் தனித்திருந்து பகைமை பாராட்டுதல் புல்லறிவாண்மையின் விளைவு’ என்பது கருத்து. தண்டிகெட்டு, விலகி நின்று.

325 எய்தி இருந்த அவைமுன்னர்ச் சென்று எள்ளி,

வைதான் ஒருவன் ஒருவனை;-வைய வயப்பட்டான் வாளா இருப்பானேல், வைதான் வியத்தக்கான், வாழும் எனின். பலபேர் கூடியிருந்த அவைக்கு முன்னே ஒருவன் சென்று அங்கிருந்த ஒருவனை இகழ்ந்துபேசி வைதான். அப்படி அவன் வையவும் அவனால் வையப்பட்டவன் பொறுமையுடன் சும்மா இருப்பானானால், வைதவன் அதன்மேல் வாழான். அங்ஙனம் இருந்த பின்னும், அவன் உயிரிழக்காது வாழ்ந்தானென்றால் அவன் வியக்கத்தக்கவனே யாவான்!

‘அவையிற் சென்று ஒருவரை எள்ளி வைதல் புல்லறிவாண்மை’ என்பது கருத்து.

326. மூப்புமேல் வாராமை முன்னே, அறவினையை

ஊக்கி, அதன்கண், முயலாதான், -நூக்கிப், ‘புறத்திரு போகு’ என்னும் இன்னாச்சொல் இல்லுள் தொழுத்தையாற் கூறப் படும். தன் உடலின் மேல் மூப்பானது வந்து சேராமைக்கு முன்பாகவே, அறச்செயல்களை மேற்கொண்டு, அந்த வகையிலே முயற்சி எடுத்துக் கொள்ளாதவன், தன் வீட்டினுள்ளேயே ஒதுக்கித் தள்ளப்பட்டும், வெளியே போய் இரு, இவ்விடம் விட்டுப் போய்விடு’ என்றும் சொல்கிற இனிமையில்லாத சொற்களை, வேலைக்காரியாலும் சொல்லப் படுகின்ற கேவலமான ஒரு நிலைமையே அடைவான்.