பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 - நாலடியார்-தெளிவுரை

களவுங் கற்புமாக விரிந்த அகப்பொருள் முறைமைகள் எல்லாம் செழுந்தமிழ் நூல்கள் பலவற்றுள்ளும் விரித்துரைக்கப் பட்டிருக்க, நாம் காணலாம். எனினும், இந்தப் பத்துப் பாடல்களுள்ளும் கூறப்பட்டிருக்கும் துறைகளையும் நாம் அநுபவிப்போம்.

391. முயங்காக்கால், பாயும்பசலை; மற்று ஊடி

உயங்காக்கால் உப்பின்றாம் காமம் - வயங்கோதம் நில்லாத் திரை யலைக்கும் நீள்கழித் தண் சேர்ப்ப புல்லாப் புலப்பதோர் ஆறு. (தலைமகனுக்கு வாயில் நேர்ந்த தோழி, தலைமகளின் புலவி நீங்கச் சொல்லியது இது)

விளங்குகின்ற கடலானது நிலையாக இராமல், அலைகளால் மோதி வருந்துகின்ற, நீண்ட கழிகளினது குளிர்ந்த கரையை உடைய அரசனே! ‘தழுவிக் கூடாவிட்டால் உடலிலே பசலையானது மிகுதியாகப் பரவும். ஊடல் கொண்டு வருந்தாவிட்டால் காம நுகர்ச்சியானது ஒரு சுவை இல்லாமற் போய் விடும். ஆதலால், கூடுவதும் ஊடுவதுமாக அமைவதே காம இன்பத்திற்கு ஒப்பற்ற நன்னெறியாகும்’ என்று அறிவாயாக. இதனால், தலைவி தன் புலவி நீங்கித் தலைவனுடன் கூடுதற்கு இசைந்தாள் என்பது பெறப்படும். 392. தம்மமர் காதலர் தார்சூழ் அணியகலம்

விம்ம முயங்குந் துணையில்லார்க்கு-இம்மெனப் பெய்ய எழிலி முழங்கும் திசை யெல்லாம் நெய்தல் அறைந்தன்ன நீர்த்து. (பருவங்கண்டு, ஆற்றாளாகிய தலைவி தோழிக்குச் சொல்லியது இது)

தம்மால் விரும்பப்பட்ட காதலருடைய மாலையணிந்த அழகிய மார்பை மகிழ்வினால் பூரிக்கும்படியாகத் தழுவுவதற்குரிய வாய்ப்பு இல்லாத மாதர்களுக்கு, இம்மென்னும் ஒலியோடு மேகம் நீரைச் சொரிய முழங்கும் திசைகள் எல்லாம், சாப்பறை அடித்தாற் போன்ற கொடிய தன்மை உடையதே யாகும். -

393. கம்மஞ்செய் மாக்கள் கருவி ஒடுக்கிய

மம்மர்கெநள் மாலை, மலராய்ந்து, பூத்தொடுப்பாள்,