பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் - . 201

கைம்மாலை யிட்டுக் கலுழ்ந்தாள், துணையில்லார்க்கு இம்மாலை என் செய்வது என்று.

(தலைமகள் செலவு உடன்படாமையைத் தலைமகற்குத் தோழி சொல்லியது இது)

கம்மியத் தொழிலைச் செய்கின்ற மனிதர்களாகிய கம்மாளர்கள், தமது கருவிகளை வேலையில்லாமல் அடங்கச் செய்த, மயக்கத்தைக் கொண்ட மாலைப் பொழுதிலே, மலர்களை ஆராய்ந்து எடுத்து, தன் கணவனுக்கு இடுவதற்கு மாலையாகத் தொடுப்பவள், “நாயகனில்லாதவர்களுக்கு இம்மாலை என்ன பயன் செய்வது?” என்று கையிலிருந்த மாலையைக் கீழே போட்டுவிட்டுக் கண்கலங்கி இருந்து அழுதாள்.

394. செல்சுடர் நோக்கிச் சிதரரிக்கண் கொண்டநீர்

மெல்விரல் ஊழ்தெறியா, விம்மித், தன் - மெல்விரலின் நாள்வைத்து, நம்குற்றம் எண்ணுங்கோல், அந்தோ தன் தோள்வைத்து அணைமேற் கிடந்து (வினைமுற்றி மீண்ட தலைமகன் பாகன் கேட்பச் சொல்லியது இது)

மேற்கடலை நோக்கிச் செல்லுகின்ற சூரியனைப் பார்த்துச், சிதறிய செவ்வரிகளையுடைய கண்களிலே நிறைந்துள்ள நீரைத் தன் மெல்லிய விரல்களால் முறைமையாக அடிக்கடி எடுத்தெறிந்து, விம்மி அழுது, தன் மென்மையான விரலினால் நாட்களைக் கணக்கிட்டுக் கொண்டு உறங்காமலே இருப்பாளோ, எம் தலைவி? ஐயோ!

395. கண்கயல் என்னும் கருத்தினால், காதலி

பின்சென்ற தம்ம, சிறுசிரல் -பின்சென்றும், ஊக்கி எழுந்தும், எறிகல்லா ஒண்புருவம் கோட்டிய வில்வாக்கு அறிந்து.

(தலைமகன் தான் உற்றதைப் பாங்கற்குச் சொல்லியது இது)

சிறிய சிச்சிலிக் குருவியானது, என் காதலியின் கண்களைக் கயல் மீன்கள் என்கிற எண்ணத்தினால் பற்றக் கருதி, அவள் பின்னே தொடர்ந்தது. அவ்வாறு பின்பற்றிச் சென்றும், முயற்சி செய்தும், அவளது ஒளியுடைய புருவமானது வளைந்த வில்லின் வளைவுபோல் இருந்ததைக் கண்டு அஞ்சிப் பின்னர் ஓடிவிட்டது.