பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன் - 83

யாகிற நிலைமையானது செவ்வையாகத் தம்மிடத்தே நேரிட் டிருப்பினும், உயர்குடியிலே பிறந்தவர்கள், தம் சக்திக்கு ஏற்றவாறு உபகாரஞ் செய்வதற்குப் பின்வாங்கவே மாட்டார்கள்.

‘எடுத்த காரியம் முழுவதும் நிறைவேறாமற் போனாலும் முடிந்தமட்டும் உதவுபவர் நற்குடிப்பிறந்தவர்; பிறர் இருப்பினும் உதவார் என்பது கருத்து.

149. செல்லா விடத்துங் குடிப்பிறந்தார் செய்வன,

செல்லிடத்துஞ் செய்யார், சிறியவர், - புல்வாய் பருமம் பொறுப்பினும், பாய்பரி மாபோல் பொருமுரண் ஆற்றுதல் இன்று.

தம்முடைய வறுமை முதலியவற்றால், தாம் ஒன்றைச் செய்ய முடியாது போயின காலத்தினும், நற்குடியிலே பிறந்தவர்கள் செய்யும் காரியங்களைத் தம்மால் செய்ய முடிந்த காலத்தினுங்கூடத் தாழ்ந்தகுடியிற் பிறந்தவர் செய்ய மாட்டார்கள். மானானது சேணம் முதலிய போர்க்கோலங் களைச் சுமந்து கொண்டிருந்தாலும், பாய்ந்து செல்லும் தன்மையினை உடைய போர்க்குதிரையைப் போலப் போர் செய்ய வல்ல வலிமையை உடையதா யிருப்பதில்லை.

‘கீழோர் வாய்ப்பிருந்தும் நற்செயல்களுள் ஈடுபட மாட்டார்: மேலோர் வாய்ப்பற்றபோதும் முடிந்தவரை ஈடுபடுவர் என்பது கூறி, அவரது குடிச்சிறப்புக் கூறப்பெற்றது.

150. எற்றொன்றும் இல்லா இடத்தும், குடிப்பிறந்தார்

அற்றுதற் சேர்ந்தார்க்கு அசைவிடத்து - ஊற்றாவர்; அற்றக் கடைத்தும் அகல்யாறு அகழ்ந்தக்கால், தெற்றெனத் தெண்ணி படும். உயர்குடியிலே பிறந்தவர்கள், யாதொரு வசதியும் தம்மிடத்தே இல்லாத இடத்தினும், வேறு கதியற்றுத் தம்மை வந்து அடைந்தவர்களுக்குத் தளர்ச்சி நேர்ந்தவிடத்து ஊன்றுகோல் போலத் தாங்கி உதவுவார்கள். எதுபோல என்றால் - நீர் முழுவதும் வறண்டு போயின காலத்தினும், அகற்சியை உடைய ஆறானது தோண்டின விடத்துத் தெளிவான தண்ணீரை உடையதாயிருப்பது போல் - என்க.

கோடையினும் தோண்டினால் நீர் தந்து உதவும் ஆற்றைப் போல, உயர்குடிப் பிறந்தோர் தம் வறுமையினும் தம்மை வந்து