பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏதாவது ஒரு உருப்படியிடம் இன்பம் அனுபவித்து விட்டு, ஜாலியாக மறுநாள் ஊர் வந்து சேர்வார்கள். திருநெல்வேலி டவுணில் கோயிலை ஒட்டிய மாடத்தெருக்களும் அவற்றைச் சார்ந்த கனகராய முடுக்குத் தெரு சொக்கலிங்க முடுக்குத் தெரு போன்ற சந்துகளும் பிரக்கியாதி பெற்ற இடங்களாக இருந்தன. அத் தெருக்களில் தான் விபசாரத்தைத் தொழிலாகக் கொண் டிருந்த விலைமகளிர் வீடுகள் வரிசையாக இருந்தன. சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலையில் ஒரு பக்கத்தின் வீடுகளிலும் பரத்தையர் குடியிருந்தனர். அந்தி வேளை முதல், தங்களைத் தாங்களே சிங்காரித்துக் கொண்டு - அந்தியிலே பூத்தொளிரும் மந்தாரை போல், தனது கந்தமலர் பூங்குழலும் கள்ளநகைச் செவ்விதழும், பந்தனைய மார்பகத்தில் பட்டிலொரு ஜாக்கெட்டும் வெளிச்சமிட்டுக் காட்டி - வாசல்படி அருகே நின்று வீதிவழிப் போகிற ஆண்களை வா வா எனக் கைச் சாடை காட்டி பிழைப்புக்கு வழிதேடும் தொழிற்பெண்கள் மலிந்திருந்த நாள்கள் அவை. இன்பம் அனுபவிக்கப் போகாதவர்கள் கூட, வீட்டுக்கு வீடு வாசல் படியில் நின்று சுயவிளம்பரம் செய்து கைசாடையும் கண்சாடையும் காட்டி முறுவலிக்கிற ரகம் ரகமான பெண்களைக் கண்டு களிப்பதற்காக அத் தெருக்களில் சும்மா நடந்து போவது வழக்கம். அரசு தடைச்சட்டம் கொண்டு வந்து, தொழில் ரீதியான விபசாரத்தை ஒடுக்கிவிடுகிற காலம் வரை அத் தெருக்கள் ஆண்களுக்குக் கவர்ச்சிப் பிரதேசமாக விளங்கின. சோம்பல் மடத்தில் கூடி வம்பளந்தும் சீட்டாடியும் பொழுது போக்கிய அண்ணாச்சிகளில் சிலபேருக்கு திடீர் திடீரென்று ஏதாவது புதுமை பண்ணவேண்டும் என்ற ஐடியா தோன்றும் ஒரு சமயம் பேட்மிட்டன் பந்து விளையாடலாம் என்று அம் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டார்கள் சிலர் வலை, பந்து மட்டைகள் எல்லாம் வாங்கினார்கள். சிவன் கோயிலுக்கு எதிரே கிடந்த புறம்போக்கு நிலத்தை சுத்தம் செய்து ஆட்ட மைதானமாக மாற்றினார்கள். சில வாரங்கள் உற்சாகமாகப் பந்து விளையாடினார்கள். பையப்பைய உற்சாகம் வற்றியது. விளையாட ஆள் இல்லாது போயிற்று 174 3: வல்லிக்கண்ணன்