பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதே போல ஒரு சந்தர்ப்பத்தில், கீழத்தெரு வாலிபர்களுக்கு தேசப்பற்று பிரிட்டு எழுந்தது. சுதந்திர சங்கம் ஏற்படுத்தினார்கள். ஒரு வீட்டின் திண்ணை அருகே கொடிக் கம்பம் நட்டு, அதில் மூவர்ணக் கொடியை பறக்கவிட்டார்கள். தினசரி திண்ணையில் அமர்ந்து நாட்டு நடப்புகளை அலசி மகிழ்ந்தார்கள். இந்த முயற்சியும் தானாகவே தேய்ந்து மடிந்தது. அண்ணாச்சி ராஜகோபால கிருஷ்ணன் வித்தியாசமானவர். அவருக்குக் கல்யாணமாகி ஒரு பெண் குழந்தையும் இருந்தது. ஆயினும் அவர் வீட்டுப் பொறுப்போ, குடும்பக் கவலையோ இல்லாது மனம் போன போக்கில் வாழ்ந்து கொண்டிருந்தார். ராஜவல்லிபுரத்துக்கு மேற்கே இரண்டு மைல் தள்ளி தாழையூத்து ரயில் நிலையம் உள்ளது. அந் நாள்களில் ரயில் பயணம் செய்ய நேரிடு கிறவர்கள் இரண்டுமைல் தூரம் நடந்து போய் ஸ்டேஷனை அடைய வேண்டும் கால ஓட்டத்தில் ஒரே ஒரு பஸ் ஊருக்கும் திருநெல்வேலி க்குமிடையே போய்வரத் தொடங்கியது. பின்னர் பல வருடங்களுக்குப் பிறகு டவுண் பஸ் போக்குவரத்து நிரந்தரமாகி, அடிக்கடி பஸ்கள் ஒடலாயின. ஆதிநிலையில் அண்ணாச்சி ராஜகோபாலகிருஷ்ணன் ரயிலுக்கு "சீசன் டிக்கட் வாங்கி வைத்துக் கொண்டு நாள் தோறும் பயணம் செய்து வந்தார். திருநெல்வேலி ஜங்ஷனிலும் டவுணிலும் யார் யாரையோ பார்த்துப் பேசி ஏதேதோ செய்து பொழுதுபோக்கினார். புத்தகங்களும் பத்திரிகைகளும் வாங்கிப்படித்தார். தாழையூத்து ரயில் நிலையம் இருந்த இடத்தை ஒட்டி சத்திரம் குடியிருப்பு என்ற சிற்றுார் அமைந்திருந்தது. காப்பி கிளப், ஒன்றிரண்டு கடைகள், குறைந்த எண்ணிக்கை வீடுகள் கொண்ட குக்கிராமம் அது. சுற்றிலும் உடை கருவேல் முதலிய முள்மரங்கள், ஆவாரஞ்செடிப் புதர்கள், புல்வகைகள் மண்டிய வெம்பரப்பு நிலமே விரிந்து கிடந்தது. பிற்காலத்தில் அங்கே தான் சிமின்ட் கம்பெனி தோன்றியது. அப் பிரதேசத்தில் ராஜகோபாலகிருஷ்ணனுக்கும், அவருடைய அண்ணன் ஆறுமுகம் பிள்ளைக்கும் அதிகமான நிலம் சொந்தமாக இருந்தது. அதனால், ராஜகோபாலகிருஷ்ணன் அங்கே தான் தங்குவதற்கு வசதியாக ஒன்றிரு அறைகள் கொண்ட சிறு வீடு கட்டிக் கொண்டார். வேறு சில வீடுகள் கட்டி வாடகைக்கு விட்டு வருமானமும் தேடிக்கொண்டார். நிலைபெற்ற நினைவுகள் : 175