பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புரத்துக்குக் கிழக்கே பல மைல் துரத்தில் சீவலப்பேரி என்ற ஊர் இருக்கிறது. உண்மையில் அந்த ஊரின் பெயர் யூனிவல்லபப்பேரி என்பதேயாகும் பாண்டியமன்னன் அங்கு ஒரு ஏரி வெட்டி வைத்தான். அவன் பெயராலேயே அது குறிக்கப்பட்டது. அந்தப் பெயரே ஊரின் பெயரும் ஆயிற்று. இது அறிஞர் சேதுப்பிள்ளை அவர்களின் முடிவு. துfவல்லபப்பேரி என்ற ஊர்ப்பெயர் சீவலப்பேரி என்று சிதைவுற்றதுபோலவே, ராஜவல்லபபுரம் என்ற பெயர்தான் ராஜவல்லி புரம் ஆயிற்று என்பது அவருடைய விளக்கமாக அமைந்துள்ளது. ஆனாலும் ராஜவல்லிபுரம் என்ற அழகான பெயரும் அதை ஒட்டி எழுந்த மக்களின் கதையும் தான் ஊர்ஜனங்களுக்கு வெகுவாகப் பிடித்துள்ளது. ராஜவல்லபபுரம் என்பது எடுபடவில்லை. இந்த ராஜவல்லிபுரம் தான் எங்கள் அப்பாவின் ஊர். அப்பாவின் அப்பாவான முத்தையபிள்ளை வளத்தோடு வாழ்ந்த ஊர். தாத்தா, தாத்தாவுக்குத் தாத்தா என்று பல தலைமுறையினர் வசித்த ஊர். ஆகவே, அதுவே எனது ஊரும் ஆயிற்று. என் பெயரின் தலையெழுத்தாக ஒட்டிக்கொண்டது. ரா.சு. கிருஷ்ண சுவாமி என்று. அதாவது, ராஜவல்லிபுரம் சுப்பிரமணியபிள்ளை கிருஷ்ண சுவாமி என்பதாம். அந்த ஊரை நான் கண்டறிய நேரிட்டதே என்னுடைய நாலாவது வயசில் தான். அதன் பிறகும் தொடர்ந்து அங்குநான் நீண்டகாலம் தங்கியதில்லை. இருப்பினும், ராஜவல்லிபுரம் என் சொந்த ஊர் என்று தான் சொல்லிவந்திருக்கிறேன். வாழ்க்கையின் விசித்திரங்களில் இதுவும் ராஜவல்லிபுரத்தில் கார்காத்த வேளாளர்கள் அதிகம். சைவ வேளாளர்களில் ஒரு பிரிவினர் கார்காத்தார். விவசாயம் இவர்கள் தொழில். சிறு அளவில் வயல் வைத்திருந்த சிலபேர் வயலில் இறங்கி அவர்களே உழுது, பயிரிட்டு விவசாயம் பண்ணினார்கள். மற்றப்படி, கணிசமான அளவில் வயல்கள் வைத்திருந்தவர்களும் பெரும் அளவில் நிலம் கொண்டிருந்தவர்களும், உழவுத் தொழிலில் ஈடுபட்டிருந்த பள்ளரை வேலைக்கு வைத்துக்கொண்டு, பண்ணையாராக வாழ்க்கை நடத்தினார்கள். பண்ணையார் - நிலக்கிழார் என்பது அதிகம் 22 வல்லிக்கண்ணன்