பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரொம்பகாலம் இருந்தது. வளர்ந்து பெரியவனான பிறகும், கூர்ந்து நோக்குகிறவர்களுக்கு புலப்படக் கூடியதாக அது படிந்திருந்தது. கோவில்பட்டியில் இருந்த போது என் வாழ்க்கையில், நிகழ்ந்த முக்கியமான நிகழ்ச்சி எனது 'அட்சராப்பியாசம் - அதாவது 'வித்யாரம்பம் - அதாவது கல்விப்பயிற்சி துவக்கம் - படிப்பதற்காக பள்ளிக்கூடத்தில் சேர்த்தது ஆகும் அது பெரிய விழா மாதிரி நடத்தப்பெற்றது. சரஸ்வதி பூஜைக்கு மறுநாள் எனக்கு எழுத்தறிவித்தல் ஆரம்பித்து வைக்கப்பட்டது. முறைப்படி மேளதாளத்துடன் வீட்டின் பெரிய பட்டாசாலையில் (பட்டாசல்) கூட்டம் குமுமியிருந்தது. அவல் பொரிகடலை பழங்கள் முதலியன அதிக அளவில் வைக்கப்பட்டிருந்தன. குத்து விளக்கேற்றி, பூஜைகள் செய்து அண்ணாவி வந்து எழுத்து கற்றுக் கொடுப்பதைத் துவக்கி வைத்தார். மறுநாள், அருகிலிருந்த அண்ணாவியின் திண்ணைப் பள்ளிக் கூடத்தில் கொண்டுவிடப்பட்டேன். ஒலைக் குடிசை உயர்ந்த ஒரு திண்ணை மீது வாத்தியார் அமர்ந்திருப்பார். அவருக்கு அண்ணாவி என்று பெயர். அவர் கையில் எழுத்தாணி பிடித்து ஏட்டில் எழுதிக் கொண்டிருப்பார். பிள்ளைகள் கீழே உட்கார்ந்திருப்பார்கள். சிறுவர் சிறுமியர் சேர்ந்தே இருப்பர். மணல் பரப்பப்பட்டிருக்கும். அந்த மணலில் விரலால் எழுதி எழுதிப் பழக வேண்டும் கற்பலகை, குச்சி எதுவும் கிடையாது. எழுத்தறிவித்த விழாநாள் அன்று, மஞ்சள் பூசிய - எழுத்துக்கள் எழுதப் பெற்றிருந்த புது ஏடு ஒன்றும் என்னிடம் அளிக்கப் பட்டிருந்தது. அதை எடுத்துக் கொண்டுதான் பள்ளிக்கூடம் போனேன். ஒன்றிரு மாதப் பயிற்சிக்குப் பிறகு அந்தத் திண்ணைப் பள்ளியிலி ருந்து நான் வேறொரு பெரிய பள்ளியில் சேர்க்கப் பட்டேன். பாலர் வகுப்பில், இங்கு கற்பலகை, குச்சி, புத்தகம் எல்லாம் உண்டு. என் அண்ணன் படித்துக் கொண்டிருந்தது இந்தப் பள்ளியில்தான். அது கடைவீதியில் இருந்தது. கடைகளும் அங்கே அடுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட பலவகைப் பொருள்களும் அவற்றின் வர்ண வேறுபாடுகளும் கவனத்தைக் கவரும் காட்சிகளாக விளங்கின. 38 : வல்லிக்கண்ணன்