பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவருக்கு ஆசிகூறி வாழ்த்தி அருள்புரிந்ததாகவே அவர் நம்பினார். அதனால் அவருடைய பக்தி அதிகரித்தது. பூஜைகள் சிறப்பாக அவருடைய பக்தியையும் அவர் மனைவியின் பயத்தையும் அதிகப் படுத்தும் தன்மையில் சில காரியங்கள் நடந்தன. . ஒருநாள் அதிகாலையில் அவர் ஆற்றில் நீராடிவிட்டு வந்து உரிய முறைப்படி பூஜை அறையில் புகுந்தபோது, கிருஷ்ணச் செம்பைச் சுற்றி வளையமிட்டபடி ஒரு நல்ல பாம்பு படுத்திருப்பதை அவர் கண்டார். மனித இயல்புப்படி அவர் உடம்பு நடுங்கத்தான் செய்தது. உள்ளத்தில் பயம் எழாமலில்லை. இருப்பினும் அவர் பயபக்தியோடு கைகூப்பி கோபாலசுவாமியை வணங்கினார். ஐயனே, இது என்ன சோதனை? நான் என்ன பாடம் செய்தேன்? என்று புலம்பினார். பாம்பு தலைதுாக்கி ஆட்டிவிட்டு, நகர்ந்து வெளியேறியது. அவர் வழக்கமான பூஜைகளை செய்துமுடித்தார். அன்று இரவும் அவர் ஒரு கனவு கண்டார். அதே முனிவர் தோன்றி அவரை ஆசிர்வதித்தார். அன்டனே நீ பயப்படத் தேவையில்லை. அந்த கிருஷ்ணசர்ப்பத்தினால் எவ்விதமான தொந்தரவும் ஏற்படாது. அது கோபாலகிருஷ்ண விக்ரகத்தை வழிபட்டுப் பாதுகாக்கும் சக்தி, அதுக்கும் பால்வைத்து வணங்கு யாருக்கும் தீங்கு செய்யாத நல்ல பாம்பு அது என்று முனிவர் தெரிவித்தார். அன்றிலிருந்து பக்தர் அந்தப் பாம்பையும் தெய்வீக அம்சமாகவே மதித்தார். பால் பழம் படைத்துக் கும்பிட்டார். அந்தப் பாம்பு மற்றவர்கள் கண்களில் படாமல் மறைந்தே வசித்தது. காலம் இயல்பின்படி ஓடியது. பாம்பு மனைகாவல் நாகம் என மதிக்கப்பெற்று பக்தியுடன் போற்றப்பட்டது. அப்படியிருக்கையில் ஒருநாள் அதிர்ச்சி தரும் ஒரு நிகழ்ச்சி நடந்தது. வீட்டு ஐயா காலையில் ஆற்றுக்குக் குளிக்கப்போயிருந்தார். அம்மா காலைப் பணிகளை முடித்துவிட்டு வாய்க்காலுக்கு நீராடச் சென்றாள். அவர்களது கைக்குழந்தை தொட்டிலில் கிடந்தது. ஆழ்ந்த உறக்கம் அது இப்போதைக்கு விழித்தெழாது என்ற நம்பிக்கையோடு அம்மா புறப்பட்டாள். சாமி, கடவுளே! பிள்ளையை பத்திரமாப் பாத்துக்கோ என்று முணமுணத்துவிட்டு, கதவைச் சாத்திப் பூட்டிவிட்டு வெளி யேறினாள். 42 கி வல்லிக்கண்ணன்