பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

影 7 接 எனது பிள்ளைப் பருவத்தில், நான் பெருங்குளம் ஊரில் வசிக்க நேர்ந்த வருடங்களே மிக இனிய காலகட்டம் என்று எனக்கு எண்ணம் எழுவது வழக்கம் - என்னுடைய ஆறு ஏழாவது வயது காலத்தில் நான் அவ்வூரில் வாழ்ந்தேன். சூழ்நிலைகளும், தெரிய நேர்ந்த மனிதர்களும், கால ஒட்டத்தில் நிகழ்ந்த பலவித அனுபவங்களும் பார்வையில் பட்ட காட்சிகளும் மனசில் ஆழப்பதிந்து அழிக்க முடியாத தடங்களைப் பதித்துள்ளன. விழிப்புற்ற அறிவு அனைத்து ரக விஷயங்களையும் உள்வாங்கிக் கொண்டிருந்தது. எல்லாமே புதுமையாய், விந்தையாய், வேடிக்கைகளாய் தோன்றி, உள்ளத்து உணர்வுகளை சிலிர்க்கச் செய்த பருவம் அது. பெருங்குளம் நவதிருப்பதி, என்ற சிறப்பைப் பெற்ற ஊர்களில் ஒன்று பூரீவைகுண்டத்தில் தொடங்கி, ஆழ்வார்திருநகரியில் முடியும் நவதிருப்பதித் தலங்கள். இவ் ஒன்பது ஊர்களிலும் கோயில் கொண் டிருக்கும் பெருமாள் (விஷ்ணு) வைஷ்ணவர்களுக்கு விசேஷமான தெய்வம் பூரீவைகுண்டம் கோயிலில் எழுந்தருளியிருப்பவர் கள்ளர் பிரான். (கள்ளப்பிரான்). பெருங்குளம் கோயிலில் மாயக்கூத்தர்' இருக்கிறார். வைகுண்ட ஏகாதசிநாளில், பக்தர்கள் ஒன்பது திருக்கோயில் களுக்கும் அன்றே சென்று ஒன்பது பெருமாள்களையும் சேவித்தால், பெரும்புண்ணியம் என்று நம்பி, அவ்வாறே செயல் புரிவது வழக்கம் பூரீவைகுண்டத்தை அடுத்து, இரண்டு ஊர்களில் நவதிருப்பதிக் கோயில்கள் இருக்கின்றன. பெருங்குளம் நான்காவது கோயிலைக் கொண்டிருக்கிறது. எல்லா ஊர்க் கோயில்களும் பெரியன தான். பூரீவைகுண்டத்திலிருந்து புறப்பட்டுப் பெருங்குளம் போகிற சாலையில், வழி நெடுக அநேக குளங்கள் உண்டு பெருங்குளம் ஊரின் குளம் மிகப் பெரியது. அதனாலேயே அந்த ஊருக்கு அப் பெயர் வாய்த்திருந்தது. பலமைல் தொலைவான அந்த ரோடில், ஒரு திருப்பத்தில் 'செவளை (சிவகளை) என்ற ஊர் இடம் பெற்றுள்ளது. அங்கு நிலைபெற்ற நினைவுகள் $ 51