பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 & நிலைபெற்ற நினைவுகள் போனா. எப்படி? அதனால நாளைக்கே வந்திரலாமா. அல்லது என்னக்கி உங்களுக்கு செளகர்யம்னு சொல்லுங்க. நானே, அங்க வந்து உங்களைக் கூப்பிட்டுக்கிடுதேன்னு சொன்னார். வ.கரீசிவரின் கீழ்ப்பகுதியைக் கையால் பொத்திக்கொண்டு, உங்களுக்கு எப்ப செளகரியப்படும், நான் சை போகத் தயார்ன்னு சொன்னார். ஞாயிற்றுக்கிழமை. உங்ககூட பஞ்சவடிக்கு ரசிகமணி வீட்டின் பெயர் பஞ்சவடி) வாரேன் அது புதுவிதமான அனுவமா இருக்குமே, அதனால நானே உங்களைத் தென்காசியில் இருக்கிற பஞ்சவடிக்குக் கூட்டிக்கிட்டுப் போறேன்” என்றேன். வ.க. ரிசீவரின் கீழ்ப் பகுதியில் பொத்தி வைத்திருந்த தன் கையை எடுத்துவிட்டு எதிர் முனையில் போனில் இருக்கும். தீப. நடராஜனிடம், நானும் கழனியூரனும் நாளைக்காலையில் அங்கு உங்கள் வீட்டிற்கு வருகிறோம்” என்று சொன்னார். இப்படித்தான். பஞ்சவடியில் இருந்து வ.க.வுக்கு அழைப்பு வந்தது. மறுநாள் காலையில் நான் எனது டிவி. எஸ். சூப்பர் எக்ஸ். எல். வண்டியில், ஏறினேன். வ.க.வும் அந்த வண்டியில் என் பின்னால் ஏறி உட்கார்ந்து கொண்டார். வண்டி கழுநீர்குளத்தில் இருந்து ஒருகாட்டுப் பாதை வழியாக, ஒத்தையடித்தடத்தில் குறுக்கு வழியாக, அடைக்கல பட்டணம் என்ற ஊரைப் பார்த்துச் சென்றது. சிறு தெய்வக் கோயில்களும் மரங்களும், பனைமரக் கூட்டங்களும், புஞ்சைக் காடுகளும் சூழ்ந்த பகுதியின் ஊடே சென்ற அந்த ஒத்தையடிப் பாதை வழிப் பயணத்தை வ.க.ரொம்ப ரசித்தார். வண்டியை அடைக்கல பட்டணத்தில் ரோட்டோரம் இருந்த நண்பர் ஒருவரின் வீட்டில் போட்டு விட்டு அங்கிருந்து. பஸ்ஸில் தென்காசி சென்றோம். தென்காசியில் தீபநடராஜன் என்னையும். வ.க.வையும் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்றார். ஏற்கனவே, சில இலக்கிய ஆர்வலர்கள், அங்கு வ.க. வரப்போகிறார் என்று தெரிந்து பஞ்சவடிக்கு வந்து விட்டார்கள். சத்சங்கம் கூடி விட்டது. பிறகென்ன பேச்சு, பேச்சு, ஒரே பேச்சுதான். வ.க.வும் அந்த சத்சங்கத்தில் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டார். மதிய விருந்து பஞ்சவடியில், ரசிகமணி வீட்டு உபசரிப்புக்கும் சாப்பாட்டுக்கும். கேட்கவா வேண்டும்! விருந்து உண்ட களைப்புதிர சற்றே ஓய்வு. பிறகு மீண்டும். இலக்கிய விசாரம் என்று அன்றைய பொழுது மகிழ்ச்சியாகக் கழிந்தது.