பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் : 149 மாலையில் சிற்றுண்டி வந்தது சாப்பிட்டோம் சிற்றுண்டிக்குப்பிறகும் பேச்சு தொடர்ந்தது. "இரவு உணவையும் சாப்பிட்டு விட்டுத்தான் போகணும்” என்று தீப.ந. சொல்லி விட்டார். இரவு சாப்பாட்டிற்குப் பிறகு புறப்பட்டு பஸ்ஸில் அடைக்கல பட்டணம் வந்து நண்பரின் வீட்டில் நின்ற இருசக்கர வாகனத்தில் நானும் வ.க.வும், அதே காட்டுப் பாதை வழியாக ஒற்றையடிபாதையில் பயணித்தோம். இருட்டுக்கே உரிய வாசம், இரவில் எழும் பூச்சிகளின், சத்தம் எல்லாம் சேர்ந்து அந்தப் பயணத்தை ரம்மியமாக்கியது. பழுத்த எழுத்தாளர் ஒருவரை அத்தராத்திரியில், காட்டு வழியில் அழைத்துச் செல்கிறோம் என்று நினைத்தபோது என் நெஞ்சு படபடத்தது. பாதி வழி சென்றதும், கழனியூரன் வண்டியை நிறுத்துங்கள்” என்றார் வ.க.எனக்கு என்ன! ஏது?” என்று புரியவில்லை. ஒருவேளை பெரியவருக்குத் தலைசுற்றுகிறதோ என்னவோ என்று நினைத்து வண்டியை நிறுத்தினேன். "இஞ்சினை அமர்த்திவிட்டு வண்டியை அப்படி ஒரு ஒரமாக நிறுத்துங்கள். என்று கட்டளை இடுகின்ற தோரணையில் கூறினார். என்ன ஏது என்று புரியவில்லை என்றாலும் அவர் சொன்னபடியே, இஞ்சினை நிறுத்தினேன். உடனே அவர் வண்டியில் இருந்து இறங்கித் தரையில் நின்று கொண்டு, “வண்டியை ஒரு ஒரமாய் நிறுத்துங்கள். இந்த இருளும், இந்த இடமும் ரம்மியமாய் இருக்கிறது. சற்று நேரம் இங்கு உக்கார்ந்திருப்போம்” என்றார். “ரசனை எல்லாம். சரிதான் வேளை கெட்ட வேளையில், பூச்சி பொட்டு வந்து கடித்து விடக் கூடாதே" என்ற பயம் எனக்கு உள்ளூர இருந்தாலும் பெரியவர் சொன்ன சொல்லைத்தட்டாமல், வண்டியை ஒரமாய் ஒரு பனை மரத்தின் அடியில் நிறுத்தினேன். வாருங்கள் இப்படி உட்காருவோம் என்று. அங்கு கிடந்த இரண்டு சின்னஞ்சிறு பாறைகளைக் காட்டினார். பிறகு என்ன செய்ய நானும் அவர் சொன்ன இடத்தில் உட்கார்ந்தேன். இரவு ஒன்பது மணிக்கு மேல் இருக்கும், மூன்றாம்பிறைச் சந்திரன் இளம் ஒளியைப் பரப்பிக்கொண்டிருந்தது. காட்டுப் பூச்சிகளின் உய்’ என்ற சத்தமும், குளிர்ந்த தென்பொதிகைத் தென்றலின் தழுவலும் மனதிற்கு இதமாக