பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 & நிலைபெற்ற நினைவுகள் 爱 என்னை மறந்த துரக்கம் திடீரென்று யாரோ என்னை எழுப்புவதற்காகக் குரல் கொடுத்துக் கொண்டிருந்த T# ஏற்பட்டது. விழிப்புற்றேன். எழுந்து உட்கார்ந்து பார்த்தால் சுற்றிலும் நெடுக்க கட்டை வண்டிகளும் கூண்டு வண்டிகளும் மாடுகளும் ஆட்களும் மொய்த்து நின்றது வியப்பு தந்தது. எழுந்திரு. தள்ளிப்போ. வண்டியை இங்கே நிறுத்தணும்’ என்று ஒருவன் கூவினான். எழுந்து விலகி ரோடில் நடந்தேன். மீண்டும் படுக்க வேண்டும் என்ற நினைப்பு எனக்கு வரவில்லை. நடக்கலாம் என்ற உணர்வே உந்தியது. நடந்தேன். மணி என்ன இருக்கும் என்று தெரிய வழியில்லை. எங்கும் இருட்டு கவிந்து கிடந்தது. இருளோடு ஒரு நிழலாக நான் நடந்தேன். எத்தனை தூரம் நடந்திருப்பேன், எவ்வளவு நேரமாக நடக்கிறேன் என்பது எதுவும் புரியவில்லை. நடை, தூரத்தை விழுங்கிக் கொண்டிருந்தது. ஆயினும் அலுப்பும் அசதியுமாக இருந்தது. ரோட்டோரத்தில் ஒரு புளியமரத்தின் கீழே படுத்தேன். துக்கம் சூழ்நிலையை மறக்க வைத்தது. ஆழ்ந்த தூக்கம். மீண்டும் விழிப்பு வந்த போதும் இருள்தான் சூழ்ந்திருந்தது. நான் இருந்தது எந்த இடம், நேரம் என்ன இருக்கும் என்று மனம் வழக்கம் போல் குழம்பியது. வானத்தில் நட்சத்திரங்கள் பிரகாசமாக ஒளிர்ந்தன. ஒரு வெள்ளி பேரொளி, தெறித்து மின்னியது. அது விடி வெள்ளியாக இருக்கும் என்றது மனம், மோசம் செய்யும் செட்டி வெள்ளியாகக் கூட இருக்கலாம் என்றது இன்னொரு நினைப்பு. விடி வெள்ளி வருவதற்கு முன்னதாக, அதே மாதிரிப் பேரொளி கொண்ட மற்றொரு வெள்ளி தோன்றி ஒளிரும். கிராமங்களில் வயல் வேலைக்குப் போகிறவர்கள், தோட்டங்களுக்குத் தண்ணீர் பாய்ச்சுவதற்காக ஏற்றம் இறைக்கச் செல்வோர், விடிவெள்ளி வந்துவிட்டது, சீக்கிரம் விடிந்து விடும் என்று எண்ணி வீட்டை விட்டு வெளியேறுவார்கள். உரிய இடங்களுக்குப் போய் வெகு நேரம் வேலை செய்த போதிலும் விடிவின் வெளிச்சம் வந்திராது. பின்னர்தான் கீழ் வானில் விடிவெள்ளி ஒளிமயமாக உதயமாகும். தாங்கள் ஏமாந்து போனதை மக்கள் தெரிந்து கொள்வார்கள். வியாழம் உறங்க வெள்ளி எழும் என்பது பேச்சு வழக்கு வியாழன் எனும் கிரகம் மறைந்ததும் சுக்கிரன் என்கிற விடிவெள்ளி உதிக்கும் முதலில் விடிவெள்ளி என ஏமாறச்செய்த கோளை மோசம் செய்யும் செட்டி என்று கிராமவாசிகள் குறிப்பிட்டார்கள்.