பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 [] நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்


வேண்டும். இடைநிலைத் தொடக்கம் போல இருந்தது. கிளம்புதல் சாலச் சிறந்தது.ஒடத் தொடங்கிய உடனேயே முதல் தடையை அணுக வேண்டும். எத்தனைத் தப்படியில் முதல் தடையை அணுகவேண்டும், எங்கு காலைத்துக்கித் தாண்டிக் குதிக்கவேண்டும் என்று சரியான முறை, சிறந்த பயிற்சிக்குப் பின்னரே கிடைக்கும். அது அவரவர் உயரத் திற்கேற்பவே தப்படி அமையும்.ஆகவே முதல் தடையைத் தாண்ட5 அல்லது 6 அடிக்கு முன்னரே தாவத் தொடங்க வேண்டும்.


போட்டித் தொடங்கியவுடன்,100 மீட்டர் ஒட்டம் போலவே தொடக்கமும், முதல் பத்து அல்லது பதினொரு தப்படிகளுக்கு இருக்கும்.முதல்தடையை அணுகும்போது இயல்பாகவே தப்படியின் அகலம் குறைந்து, தாண்டு தற்கேற்ற முறையில் சரிசெய்து (Adjust) கொள்ளும். அவ்வாறு தடையைத் தாண்ட முன் கால் நீளும்போது, உடலைச்சிறிது முன்னே வளைத்து, முன் செல்லும் காலை விரைப்பாக நீட்டி அதற்கு எதிரான கையை பின்னும் கொண்டுசென்று (வலது கால் என்றால் இடதுகை, இடது கால் என்றால் வலது கை), அதற்கு அடுத்த கையை உடல் விழுந்து விடாதவாறு காக்கும் சமநிலைக்காக (Balance) பக்கவாட்டில் வைத்துக் கொள்ளவேண்டும் (படம் காண்க).


குறிப்பு : முன்னால் நீளும் கால் (Lead Leg) விரைப் பாகவும், உடலை முன்னோக்கி வளைக்கவும், தொடரும் கால் மார்பளவு வரை உயரமாக மடிந்து வந்து தடையைத் தாண்டவும், உடனே முன் கால் தரையை மிதித்து ஒடத் தொடங்குகின்ற சரளமான ஒட்டத்திற்கு சிறந்த பயிற்சி தேவை.