பக்கம்:நீலா மாலா.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

118 'என்ன தந்தி?’ என்று எல்லாரும் பரபரப் புடன் கேட்டுக் கொண்டே பரமசிவம் பிள்ளையைச் சுற்றிலும் வந்து கின்றனர். 'கல்ல செய்திதான் வங்திருக்கிறதாம். போஸ்ட் மாஸ்டர் சொன்னுர்’ என்ருர் தந்திச் சேவகர். உடனே மாலாவின் அம்மா நளினி, அந்தத் தந்தியை வாங்கிப் பிரித்துப் படித்தாள். "கொள்ளைக்காரனைப் பிடித்த குழந்தைகளுக்கு என் வாழ்த்துக்கள். திங்கட்கிழமை காலை எழும்பூர் வருகிறேன். - டாக்டர் சூரியசேகர். 'அடடே, அதற்குள் மாப்பிள்ளைக்கு விஷயம் தெரிந்து, தந்தியும் கொடுத்திருக்கிருரே!” என்று ஆச்சரியப்பட்டார் பரமசிவம் பிள்ளை. அதற்குள் டி. எஸ். பி. திருஞானம், 'இன்று காலையில் சென்னையில் உள்ள மேல் அதிகாரிகளுக் குத் தகவல் கொடுத்தோம். அப்போது, ஒரே ஒரு குழந்தையைத் தவிர எல்லாருமே இந்த ஊர்க் குழந்தைகள்தான் என்று சொன்னுேம். அந்த ஒரு குழந்தை யார்? என்று கேட்டபோது, சென்னையில் உள்ள டாக்டர் சூரியசேகருடைய குழந்தை என்று சொன்னுேம். ஒரு வேளை உங்கள் மாப்பிள்ளைக்குச் சென்னையில் உள்ள அதிகாரிகள் தகவல் கொடுத்திருக்கலாம்” என்ருர். 'இருக்கலாம், இருக்கலாம். சென்னையில் இருக் கிருரே, உதவி போலீஸ் கமிஷனர் உத்தண்டராம பிள்ளை, அவர் மாலாவின் அப்பாவுக்கு மிகவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/120&oldid=1021682" இலிருந்து மீள்விக்கப்பட்டது