பக்கம்:நீலா மாலா.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160

160 செய்தி வந்தது. ஆம், சென்னையில் உள்ள சோவியத் துதரகத்தில் இருந்துதான் டாக்டர் சூரியசேகருக்கு இத்தகவலைத் தெரிவித்தார்கள். டெலிபோனில் பேசிய துதரக அதிகாரி சொன்னர் : கட்டுரைக்கு மட்டும்தான் பரிசு கொடுப்பதாக இந்த ஆண்டு அறிவித்தோம். ஆளுல், நீலா எழுதிய கட்டுரை மிகவும் சிறப்பாக இருந்ததோடு, அதற்காக வரைந்த சித்திரங்களும் மிகச் சிறப்பாக இருந்தனவாம். அதனுல், பரிசுக் குழுவினர் கட்டுரை எழுதிய நீலாவுக்கும், சித்திரங் கள் வரைந்த மாலாவுக்கும் பரிசு கொடுப்பதென முடிவு செய்திருக்கிருர்கள். இருவரையும் சோவியத் காட்டிற்கு விமானத்திலே அழைத்துச் செல்லவும் அங்கே ஒரு மாதம் சிறுவர் முகாமிலே தங்க வைக்கவும் ஏற்பாடு செய்கிருேம். இது குறித்து, இன்று தபாலில் நீலாவுக்கும் மாலாவுக்கும் தனித் தனியாகக் கடிதம் எழுதியிருக்கிருேம். காளைக் காலையில் எல்லாப் பத்திரிகைகளிலும் இச்செய்தி வரும். முன்கூட்டியே உங்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்றுதான் போன் பண்ணினுேம்.” 'மிகவும் கன்றி” என்று துதரக அதிகாரிக்கு டாக்டர் நன்றி செலுத்தினர். பிறகு, நீலா, மாலா, நீலா, மாலா, ஒடி வாருங்கள்' என்று உரக்கக் கூவினர். மாடியில் படித்துக்கொண்டி ருந்த நீலாவும் மாலாவும் படிகளில் தடதடவென்று வேகமாக இறங்கி வந்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/162&oldid=1021736" இலிருந்து மீள்விக்கப்பட்டது