பக்கம்:நீலா மாலா.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

161

f6? "எங்கே, கை கொடுங்கள்” என்று கூறி லோவின் கையை வலது கையாலும், மாலாவின் கையை இடது கையாலும் ஒரே சமயத்தில் பிடித் துக் குலுக்கினர். இருவரும் ஒன்றும் புரியாமல் விழித்தார்கள். 'களினி, கொஞ்சம் சர்க்கரை கொண்டு வந்து கீலாவிடம் கொடு. மாலா சொன்னபடியேதான் கடந்து விட்டது. மாலாவின் வாய்க்கு கீலா சர்க்கரை போட வேண்டாமா ?’ என்ருர் டாக்டர். 'என்ன டாக்டர் சொல்லுகிறீர்கள்?’ என்று ஒன்றும் புரியாமல் கேட்டாள் நீலா. 'நீலா, உன் கட்டுரைக்கு நேரு பரிசு கிடைத் திருக்கிறது ! உன் கட்டுரைக்கு மட்டுமல்ல; மாலாவின் சித்திரத்துக்கும் பரிசு கிடைத்திருக் கிறது. நீங்கள் இருவருமே சோவியத் காட்டிற்குச் செல்லப் போகிறீர்கள் : 'என்னப்பா, உண்மையாகவா ?” என்று மாலா கேட்டாள். "ஆம், இப்போதுதான் சோவியத் துதரகத்தி லிருந்து டெலிபோன் வந்தது. நாளைக் காலையில் பத்திரிகைகளிலும் பரிசு பெற்றவர்கள் பெயர்கள் வருமாம். உங்கள் இருவருக்கும் தனித் தனியாகக் கடிதம்கூட எழுதியிருக்கிறர்களாம். நாளைக்குக் கிடைக்கும்’ என்ருர் டாக்டர். இதைக் கேட்ட மாலாவும் நீலாவும் அளவில் லாத மகிழ்ச்சி அடைந்தார்கள். மாலா நீலாவைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/163&oldid=1021737" இலிருந்து மீள்விக்கப்பட்டது