பக்கம்:நீலா மாலா.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162

162 கட்டிப் பிடித்துக் கொண்டு, கீலா, பூவுடன் சேர்ந்த காரும் மனம் பெறும் என்பார்கள். உன் கட்டுரைக்குப் படம் போட்டதால் என கும் பரிசு கிடைத்திருக்கிறது. நானும் உன்னுடன் சோவியத் நாட்டிற்கு வரப் போகிறேன்" என்று மகிழ்ச்சி பொங்கக் கூறினுள். மறுநாள் காலை எல்லாப் பத்திரிகைகளிலும் இச் செய்தி வெளி வந்தது. வழக்கமாக ஐந்து குழந்தைகளுக்குத்தான் பரிசு கொடுப்பார்கள். ஆல்ை, இந்த ஆண்டு ஆறு குழந்தைகளுக்குப் பரிசு கொடுப்பதென்று முடிவு எடுக்கப்பட்டிருக் கிறது. காரணம், நீலா என்ற சிறுமி எழுதிய கட்டுரையும், அதற்கு மாலா என்ற சிறுமி வரைக் திருக்கும் ஓவியங்களும் ஒன்றை விட்டு ஒன்று பிரிக்க முடியாதபடி அவ்வளவு சிறப்பாக அமைங் துள்ளன. அதனல், இச்சிறுமிகளையும் பிரிக்க வேண்டாம்; சேர்த்தே சோவியத் காட்டிற்கு அனுப்பி வைக்கலாம் என்று முடிவு செய்திருக் கிருர்கள்' என்று பத்திரிகைகளில் விளக்கமாகச் செய்தி வெளி வந்தது. மத்தியானம் சோவியத் நாடு அலுவலகத்தி லிருந்து நீலாவுக்கு ஒரு கடிதமும், மாலாவுக்கு ஒரு கடிதமும் வந்தன. கடிதங்கள் ஆங்கிலத்தில்தான் இருந்தன. மாலாவுடன் ஆருவது வகுப்பிலிருந்து ஆங்கில மீடியத்தில் நீலாவும் படித்துவந்ததால் ஆங்கிலத்தில் ஓரளவு கன்ருகப் பேசவும், எழுதவும், படித்துப் புரிந்து கொள்ளவும் கற்றுக்கொண்டிருக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/164&oldid=1021739" இலிருந்து மீள்விக்கப்பட்டது