பக்கம்:நெற்றிக்கண்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 1: 9

மையாகப் புகழப்படுகிறது. இந்த சாகஸ்த்தில் வல்லவர் களாயிருக்கிற அரசியல்வாதிகள், கவிஞர்கள், எழுத்தாளர் கள், பிரமுகர்கள். வியாபாரிகள் எல்லாரும் பட்டணமாகிய கடைவீதியில் நல்ல வுே:ாகேளில் வைத்து விற்கப்படுகிறார் கள், மற்றவர்கள் விலையாவதில்லை. மற்றவர்களுடைய அசல் திறமையும் அசல் உழைப்பையும் இந்தச் சாகஸங் களைப்போல் விரைந்து கவர்ச்சி செய்வதில்லை என்று சிந்தித்து மனம் நொந்தான் சுகுணன். திறமை தோற்று வெறும் சாகஸம் மட்டுமே வெல்கிற சமூகம் எவ்வளவிற்கு அழுகியிருக்க முடியுமென்று எண்ணியபோது அந்த அழு கலை அளவிட முடியாது போல் தோன்றியது அவனுக்கு. ரங்கபாஷ்யமும், நாகசாமியும், பாண்டுரங்கனாரும். சந்திர சூடன் ஐ.சி.எஸ்.ஸாம் கள்ளக் கடத்தல் கண்ணப்பாவும் இந்தவிதமான சாகலங்களின் வேறு; வேறு உருவாக நின்று சமுகத்தை மயக்கும் கலையில், தேர்ந்து விட்டவர்களாக அவனுக்குத் தோன்றினார்கள். இவர்களை எதிர்க்கும் பாமரர்களின் சத்தியம்கூட இவர்களது அசத்தியத்தை ஒன்றும் செய்யமுடியாது போலிருக்கிறதே என்று எண்ணிய போது அந்த ஆற்றாமை எண்ணத்தையே ஏற்று ஒப்புக் கொள்ள முடியாமலும் அவன் மனம் கொதித்தது.

எட்டாவது அத்தியாயம்

- சமூக வாழ்வில் ஏற்கெனவே எட்டுப்படிகள்

ஏறிவிட்ட குடும்பங்களுக்குத்தான் ஒன்பதாவது படி அருகிலிருக்கிறதே ஒழிய முதல் படியில் கூட ஏற முடியாத குடும்பங்கள் இன்னும் அப்படியே தானிருக்க முடிகிறது. -

சுகுணனுக்கும். ரங்கபாஷ்யத்துக்கும் பகை ஏற்பட்ட பின் ஒர் இரண்டு மாத காலம் காரியாலய வாழ்க்கையில் மிகவும் கசப்பான அநுபவங்கள் நிகழ்ந்தன. சுதந்திரமான

நெ-10 - - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/151&oldid=590526" இலிருந்து மீள்விக்கப்பட்டது