பக்கம்:நெற்றிக்கண்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4龛 நெற்றிக் கண்,

வந்திருப்பதால் துளசி சந்திக்க வரப்போகிறாள்-என்ற ஒரே காரணத்துக்காக-அலுவலகத்துக்கு வந்து உட்கார்ந்த சூட்டோடு அங்கிருந்து உடனடியாக வெளியேறவும் முடியாது போலிருந்தது. ஒன்றையும் செய்ய முடியாத ஊமைக் குழப்பமாக அன்று அவன் மன நிலை இருந்தாலும் செய்ய வேண்டிய காரியங்கள் எவ்வளவோ இருந்தன. அடுத்த வாரத்துப் பூம்பொழிலில் பிரசுரிப்பதற்காக வந்திருக்கும் கையெழுத்துப் பிரதிகளிலிருந்து தகுதியான வற்றைத் தேர்ந்தெடுத்து அச்சுக் கோப்பதற்குக் கொடுக்க வேண்டும். பூம்பொழிலில் அவன் தானே எழுதுகிற தொடர் கதைப் பகுதியில் அடுத்த வாரத்துக்கானவற்றை எழுதியாக வேண்டும். இவ்வளவு வேலையிருந்தும் ஒரு வேலையும் ஒடவில்லை. இடைவேளை வந்துவிட்டதற்கு அறிகுறியாகப் பக்கத்து அறையில் டிரான்ஸிஸ்டர் ரேடியோ ஒலிக்கத் தொடங்கிவிட்டது. காலை மலர்' ஆசிரியருக்கு இடைவேளையில் பொழுதுபோக்கு இந்த டிரான்சிஸ்டர் ரேடியோதான். தன்னுடைய மனத்தின் அந்தரங்கமான சோகத்திற்கு உணர்ச்சியால் மெல்லிய சோகக் கோடுகள் இழைப்பது போல மனவியாலகிஞ்சரா -என்று நளின காந்தியை யாரோ ரேடியோவில் பாடிக் கொண்டிருந்தார்கள். பாட்டு உடனே எங்கோ எழுந்து வேகமாக ஒடவேண்டும் போல அவன் உணர்ச்சியை முடுக்கிற்று. - •

மேஜை மேலிருந்த கையெழுத்துப் பிரதிகள், புத்தகங் கள் திருத்துவதற்காக வந்திருந்த அச்சுப் படிகள், எல்லா வற்றையும் அப்படி அப்படியே டிராயரில் அள்ளி திணித்து விட்டு உடனே எழுந்து ஓடிவிட வேண்டும் போலிருந்தது சுகுணனுக்கு. . . . . . . * * *

இதற்கிடையில் அலுவலகத்துக் காண்டீன் பையன் மேஜைமேல் தேநீரைக் கொண்டு வந்து வைத்து விட்டுப் போனான். மறுபடி தானே அவளுக்குப் போன்செய்து "இங்கே வராதே! நாளை அல்லது நாளன்றைக்கு வேறெங் காவது சந்திக்கலாம் என்று சொல்லிவிடக் கை துறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/46&oldid=590412" இலிருந்து மீள்விக்கப்பட்டது