பக்கம்:பச்சைக்கனவு.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 0 லா. ச. ராமாமிருதம்

நெருப்புக் குச்சியைக் கிளித்து விளக்கை ஏற்றினான். அவள் படுக்கையில் சாய்ந்தபடி சிரித்துக் கொண் டிருந்தாள். வெகு அழகாக இருந்தாள். அவளண்டை சென்றான். அவன் மார்பில் ஒட்டிக் கொண்டிருந்த ஒரு கடிதாசுத் துண்டை எடுத்தாள். காற்றில் அலைந்து வந்த குப்பை. அதை உற்று நோக்கியதும், அச்சத்தில் அவள் புருவங்கள் நெரிந்தன.

அவளிடமிருந்து வாங்கினான். ஒரு கண், ஒரே கண். அசதியுடன் சிரிக்க முயன்று கொண்டிருக்கும் ஒரு கண் அவனை நோக்கியது. அவன் மனைவியின் புகைப் படத்தைக் கிழித்த சுக்கல்களில் ஒன்று, விடாத சாபம் போல் ஏன் இப்படி ஒட்டிக் கொண்டிருக்கிறாள்:

இவள் படத்தைக் கிழித்தெறிந்ததால் இவளை அழித்தேனோ? ஏன் இவள் கண் இப்படி எங்களைக் காவல் காக்கிறது? இவளுக்கே என்ன, செத்தபின்தான் உயிரா? -

இன்று எல்லாமே ஏன் சதி செய்கிறது? தப்பைத் தவிர வேறு எதுவுமே நம்மால் செய்வதற்கு இல்லையா?

கலை வருகிறது. தூக்கத்தினின்று விழிக்கவில்லை. படுக்கையினின்று எழுகிறேன். ஒரே கூட்டில் அடைத்த விலங்குகள்போல் ஒருவரை ஒருவர் சுற்றி வருகிறோம். அவரவர் சிந்தனையில் அவரவர் மூழ்கியபடி, பண்ணினதையே பண்ணிக்கொண்டு, எண்ணினதையே எண்ணிக்கொண்டு, நினைத்துக் கொள்கிறோம், என்னவோ ஒரொரு தடவையும் புதியதாய் உண்டாக்கு வதாய். ஆனால் எதிருக்கெதிர் இரு நிலைக்கண்ணாடி களை வைத்துவிட்டு அவற்றில் உள்ளுக்குள் உள்ளாய்த் தெரியும் எண்ணற்ற பிம்பங்கள் போல்தான், நம்முடைய எல்லையற்ற புதுமைகளும்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/175&oldid=590833" இலிருந்து மீள்விக்கப்பட்டது