பக்கம்:பச்சைக்கனவு.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அபூர்வ ராகம் O 21

அம்மாவுக்குத் தூக்கிவாரிப் போட்டது. அவள் வீட்டாருக்குக்கூட முகம் மாதிரியாய்ப் போய்விட்டது. திடீரென்று எல்லோர் முகத்திலும் வழிந்த அசடைக் கண்டு எங்களிருவருக்குந்தான் சிரிப்புத் தாங்க முடிய வில்லை. கையைக் கொட்டிக் கலகலவென்று நகைத்து சமயலறைக்குள் மறைந்தாள்.

அம்மாவுக்கு இந்த சம்பந்தம் பிடிக்கவில்லை. 'ஏண்டா? இவளைவிட எவ்வளவோ ரம்பைகளைத் தள்ளிவிட்டாயே, இவளிடம் என்னடா கண்டுவிட்டாய்? கன்னங்கரேலென்று தொட்டால்கூட ஒட்டிக்கொள்ளும் போலிருக்கிறாள்.'

'ஏனம்மா, நான் சிவப்பாயிருக்கிறேனென்று என் நிழல் எனக்காகச் சிவப்பாயிருக்கிறதா? இல்லை, அது கறுப்பாயிருக்கிறதென்று அதைத் தனியாய் அறுத்துத்தான் எறிந்துவிடுகிறதா? அதுமாதிரி அவள் எனக்காகவென்றே பிறந்திருக்கிறாள்.'

'அதுவும் அமாவாசையாய் பார்த்தா?”

“எத்தனையோ நாட்களில் ஒன்று."

'மயிர் எவ்வளவு நீளம் பார்த்தையா? வீட்டுக்கு ஆகாதென்று சொல்லுவார்கள்.'

'அ .ெ த ல் லா ம் மயிர் கட்டையாயிருக்கும் பொம்மனாட்டிகள் அளிகையில் சொல்லும் பேச்சு'... (சபாஷ்! எனக்குக்கூட இவ்வளவு சாமர்த்தியமாகப் பேச வருகிறதே!)

"பாடக்கூடத் தெரியவில்லையேடா...'

"அவளே ஒரு ராகம், அவள் தனியாய்கூடப் பாடனுமா?’’

என்னடா வெட்கமில்லாமல் பிதற்றுகிறாய்? எல்லாம் கிடக்கட்டும் என்றாலும்- என்னதான் இந்தக் காலத்துப் பெண் என்றாலும்- பத்துப் பேர் நடுவில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/30&oldid=590688" இலிருந்து மீள்விக்கப்பட்டது