பக்கம்:பச்சைக்கனவு.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. அம்முலு

அம்முவுக்கு தூக்கமே பிடிக்கவில்லை. பழக்கக் கோளாறு அப்போதைக்கப்போது கடியாரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாலும் மணி பார்க்கத் தெரிந்திருந் தால்தானே ஆனநேரம் தெரியும்?

அப்புறம் படுத்திருக்கவும் முடியவில்லை. எழுந்து போய் பல் விளக்கிவிட்டு, வென்னிரடுப்பை மூட்டி, தாமிரம் பளபளக்கத் தேய்த்து செம்மண் பூசிய வென்னிர்த் தவலையை அடுப்பில் ஏற்றினாள். பிறகு எண்ணெய் தேய்த்துக் கொண்டாள். அளகபாரத்தில் அங்கங்கே வெள்ளி சுடர்விட்டது.

வேறு யாராவது, வெற்றிலை மடித்துக் கொடுத்து, குங்குமமிட்டு, கெளரி கல்யாணம் பாடி தலையில் ஒரு கை எண்ணெய் வைத்தால் அவளுக்கு இஷ்டம் தான். ஆனால் மன்னி அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள். பகrணமெல்லாம் அம்முலுதான் பண்ணினாள். ஆனால் நேற்று முழுக்க சற்று உளையக் காரியம் தான். இப்போ போய், நேரமாச்சுன்னு அண்ணா அறைக்கதவைத் தட்டி எப்படி எழுப்புவது?

எதற்கும் ஸ்னானம் பண்ணிவிட்டு இட்டிலிப் பாத்திரத்தை அடுப்பில் போட்டு விட்டு வந்தால், மன்னி யையும் குழந்தைகளையும் எழுப்பச் சரியாயிருக்கும்.

முழுகிவிட்டு வந்து கண்ணாடி எதிரில் நின்றாள். அவள் நிறம் உற்ற சிவப்பைச் சேர்ந்ததல்ல; வெளுப்பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/61&oldid=590719" இலிருந்து மீள்விக்கப்பட்டது