பக்கம்:பதிற்றுப்பத்து-கமழ் குரல் துழாய்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. கழையமல் கழனி

களங்காய்க்கண்ணிநார்முடிச்சேரல், ஓர் ஒப்பற்ற பெருவீரன். போர்க்களத்தில் அவன் பேராண்மையே சிறந்து வினங்கும் என, அவன் ஆற்றல் ஒன்றை மட்டுமே, தொடக் கத்தில் அறிந்திருந்தார் புலவர் காப்பியாற்றுக் காப்பியர்ை. ஆனல் அவன் அரசவைக்கண் அமரும் வாய்ப்பு சிடைக்கப் பெற்று, அவைேடு நெருங்கிப் பழகப்பழகப் புலவர்க்கு அவன்பால் பொருந்திக் கிடக்கும் பண்புகள் பலவும் புலப்படலாயின.

அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணுேட்டம், வாய்மை என்ற ஐம்பெரும் பண்புகளாம் பெருந்துாண்கள் தாங்கி நிற்கும் சான்ருண்மையினைச், சாலவும் பெற்றிருக்கும் அவன் சிறப்பினையும், நடுநிலை பிறழா நல்லாட்சி நடாத்தும் அவன் நலத்தினையும், நால்வேறு திசையில் உள்ளாரும் ஒரு சேரப் பாராட்டும் பெருமையினைக் கண்டார் புலவர் காப்பியர்ை. அம்மட்டோ!

பாணர் பொருநர் புலவர் போலும் இரவலர்கள், நாள்தோறும் வந்து வாயிற்கண் நின்று வாழ்த்துரை வழங்குவராதலின், அவர்க்குப், போதும்போதும் எனக்கூறிமறுக்குமளவான மாநிதிகளை வாரிவாரி வழங்கவல்ல வளம், தன் அரசியல் பண்டாரத்திற்கு உண்டாக வேண்டுமே என்ற உயர்பேருள்ளம் உடையவகிைய அவன், அப்பெருவளம் தருவான் வேண்டி, வளம் கொழிக்கும் எல்லைநாடுகள்மீது ஓயாது போர்தொடுப்பன். அவன் கருதுவதனையே அவன் ,ாற்படையும் கருதுமாதலின், அவனைத் தம்கூடத்திற்கு அணித்தாகக் கண்ணுற்றதும், முத்துப்படுமளவு முதிர்ந்த

23