பக்கம்:பதிற்றுப்பத்து-கமழ் குரல் துழாய்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோடுகளை உடையவாகிய இளைய போர்க்களிறுகள், போர் வெறிகொண்டு பிளிறத் தொடங்கிவிடும். படையின்முன் வரிசையில் பணிபுரியும் இளம்வீரர்கள், தம்தோள்தினவு தீரும் வாய்ப்பு வந்துற்றது எனும் நெஞ்சுநிறைவுடையராகி எல்லைப்புற நாடுநோக்கி விரைவர். அவ்வாறு புகுந்த அவனும், அவன் நாற்படையும் ஆங்குத் தம் ஆற்றல் அனைத்தையும் காட்டி அருஞ்சமர் புரிந்து பெருவெற்றி பெறுவர். அதன் பயனுய்ப் பெற்ற, பொன்னும் பொருளும் போலும் பெரு வளத்தைத், தன்னைப் பாடியவாறே தன்னைத் தொடர்ந்து வரும் பரிசிலர்க்கு, அவரும் அவர் சுற்றமும் மகிழ்ந்து மனம் நிறைவுடையவராகிப் போதும்போதும் எனக் கூறி மறுக்குமளவு வாரிவாரி வழங்குவன். அல்வாறு வழங்கிய பின்னரும், ஈட்டிவைக்க இடம் காணுதபடிப் பெருகிக் கிடக்கும் அப்பெருவளப் பெருமையைப், பாரோர் அனைவரும் பாராட்டி நி ற் ப ைத யு ம் , புலவர் பார்த்து மகிழ்ந்தார்.

மணிமுடிசூடி மன்னனுகும் முடிசூட்டு விழா நாளன்று, தான்் சூடுதற்குரிய மணிமுடியும், பனந்தோட்டுக்கண்ணியும் கிடைக்காமற் போகத்தக்க தளர்நிலை, தன்குடிக்கு நேர்ந்ததாகவும், நார்முடியும், களங்காய்க்கண்ணியும் கொண்டு முடிசூட்டு விழாவினைக் குறைவின்றி முடித்து, அத் தளர்ச்சியைப் போக்கி, அரியணையில் உரிமையுடன் அமர்ந்து, தான்் பிறந்த குடிப்பெருமையைக் குன்றின்மேல் இட்ட விளக்கெனப் பெருக்கிக் காட்டியும், தன் ஆட்சிக்கீழ் வாழ்வோரின் குடிநிலைதளரின், அத்தளர்ச்சிக்காம் காரணம் அறிந்து, அதைக் கடிதின்போக்கி, அக்குடிகளைக் வாழ வைத்தும் நல்லது புரியும் நார்முடியான் நற்பண்பையும் புலவர் அறிந்து கொண்டார்.

24