பக்கம்:பத்தினிப் பெண் வேண்டும்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61


பறந்தது. யாமினி விஷயம் ஒன்றும் பலனளிக்கவில்லே என்றும் விளம்பினர் பிள்ளை. கம்பெனியின் நிலவரங்களே விளக்கியபின் அவர் திரும்பினர். செந்தில் நாயகமோ யாமினியையே சுற்றிச் சுற்றி வர வேண்டியவர் ஆர்ை. அவர் உள் மனமோ அப்போது மங்களத்தின் கினேவில் சுற்றி வந்தது. மங்களம் இவருக்கு வாழ்க்கைப்பட்ட கணத்திலிருந்து தான் இவருக்கு அதிர்ஷ்டம் உச்சத்தில் அ ம த் தொடங்கியது. யாமினி கிட்டாத வெறுப்பில், திருமணமே வேண்டா மென்று நாட்களே ஒட்டினன் அவன். பெற்ருேர்கள் வலுக் கட்டாயப்படுத்தினர்கள். மதுரையில் மங்களம் கிட்டினள். திருமணம் நடந்தது. யாமினியின் அளவுக்கு மங்களம் ரூபசுந்தரியாக இல்லாவிட்டாலும், அவளும் எழில் மெரு குடன்தான் பொலிந்தாள். ஆகவே, அழகின் நுட்பமான ரசிப்பில் வளர்ச்சி பெற்றுப் பழகிய செந்திலுக்கு மங்களம் நல்ல முறையிலேயே ஈடுகொடுத்தாள். அவனும் நிம்மதி யடைந்தான். காலப்புள் பறந்தது. அந்தக்காலம் மங்களத்தின் வயிற்றில் ஒரு பூச்சி பொட்டைப் போடவில்லே. ஒரு மகாமகம் கழித்து, ஒரு நாள் மங்களம் தன் பதியிடம் மெல்லச் சொன்னுள்: "நீங்க விரும்பி ல்ை இன்னுெரு பெண்கினக் கல்யாணம் செஞ்சுக்கிடுங்க, அத்தான்!” அவருக்கு ஒரே ஆச்சரியமாகிவிட்டது. "என் பேரிலும் வாழ்க்கையிடத்தும் என் மங்களத்துக்கு எவ்வளவு நம்பிக்கை!...” என்று தினத்தார். அவருக்கு வேறு எதைப் பற்றியும் சிந்திக்க, சிந்தித்து ஆராய, ஆராய்ந்து முடிவெடுக்க மனச்சாந்தி ஏது: அவரைத்தான் பேயாய் ஆட்டிவைத்தாளே பாமினி?...இந்த இருபது ஆண்டுகளிலே, இருபது இரவுகள்