பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசர் வரலாறு 373

டிப் போற்றினர்கள் தரும சேன ராகிய மருள் நீக்கி யார். புத்தரில் ஒரு சாராராகிய தேரர்களே வாதில் வென்று சமண சமயத்தலேவர்களில் ஒருவராய் மேம் பட்டு விளங்கினர்

திலக ஷ்தியார் திருத்தொண்டு

தம்பியார் உளராகவேண்டும் என்ற பேரருளால் மனே யின் கண் இருந்து மருள் நீக்கியாதை வளர்த்து வந்த திலகவதியார், தம்பியாகிய அவர் சமணர் சூழ்ச்சியில் அகப்பட்டுச் சமண சமயத்திற் சேர்ந்தன. ரென்பதைக் கேள்வியுற்ருர். இயற்கையிலேயே சுற்றத் தொடர் பொழியுங் கருத்தினராகிய திலகவதியார் , அப் பற்றறுதி இப்பொழுது தானே வந்து சேர்ந்தமை யால் தூய சிவ நன்னெறியே சார்வதற்கு நாதன் திரு வருளே விரும்பித் திருவதிகைத் திருவீrட்டான த் திருக் கோயிலே அடைந்து, சிவபெருமான் திருவருளே யிறைஞ்சிச் சிவ சின்னங்கள் அணிந்து நாடோறும் பொழுது புலர்வதன் முன் திருவதிகைத் திருக்கோயி லில் திருவலகிடுதல், நலமலி ஆன் சாணத்தால் நன் ருக மெழுகுதல், மலர் கொய்து கொடுவந்து மாலைகள் தொடுத்தமைத்தல் முதலிய திருப்பணிகளே விருப் புடன் செய்து இறைவனேப் போற்றியிருந்தார்.

இங்ங்னம் நாடோறும் இறைவனே வழிபட்டிருக் கும் திலகவதியார் தம்முடைய தம்பியார் தீவினேத் தொடர்பால் புறச்சமயத்தை மேற்கொண்டமையெண் னிப் பெரிதும் வருந்தினர். அதிகைப்பெருமானே இறைஞ்சி நின்று, ‘என்னை ஆண்டருளினிராகில், அடி யேன் பின் பிறந்தவனேப் புறச்சமயப் படுகுழியி னின்றும் எடுத்தாளவேண்டும்’ எனப் பலமுறையும் விண்ணப்பஞ் செய்தார். திருவதிகைப் பெருமான் , சிவநெறியில் உறைப்புடையராகிய திலகவதியாரது கனவில் தோன்றி நீ உன்னுடை மனக்கவலேயைத்