பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190

பன்னிரு திருமுறை வரலாறு


ஏதிலார் செய்த வஞ்சனைகளை வென்று மீளுதல்

இவ்வாறு திருநாவுக்கரசர் சிவநெறியிற் சேர்ந்து வாழுந் திறத்தினைப் பாடலிபுரத்திலுள்ள சமணர்கள் கேள்வியுற்று மனம் பொருராயினர். மாறுபட்ட பல சம யங்களையும் வாதில் வென்று நமது சமயத்தை நிலை நிறுத்திய தருமசேனர், தம்மைப்பற்றிய சூலேநோய் இங்கே ஒருவராலும் நீங்காமையால் உய்யும் நெறியை நாடித் திருவதிகையிற் சென்று முன்போலச் சைவ சாகிச் சூலேநோய் நீங்கி உய்ந்தனர். இனி நமது சம பம் அழிந்தது என வருத்தமுற்று ஓரிட த்திலே ஒருங்கு கூடினர்கள். தருமசேனருக்கு வந்த சூலேநோய் நம் சமயத்தில் ஒருவராலும் நீங்காமல் அவர் சிவநெறியை மேற்கொண்டதனுல் நீங்கிய இவ்வுண்மையை நம் வேந்தன் அறிந்தானுயின் நம்மை வெகுண்டு தானும் சைவகு கி நமக்கு நாடொறும் தந்துவரும் உணவு முத லிய வசதிகளேயும் நிறுத்தி விடுவான். இனி இதற்கு நாம் யாது செய்வோம்’ என்று சொல்லித் தமக் குள்ளே ஆராய்ந்து வஞ்சனேயாகிய ஒர் உபாயத்தைத் தெரிந்துகொண்டனர். நம் சமணசமயத் தலைவ ராய்த் திகழ்ந்த தருமசேனர், தம் தமக்கையராகிய திலகவதியார் சைவசமயத்தை மேற்கொண்டிருத்த லால் தாமும் அவர் போல் ஆக விரும்பித் தமக்குச் சூலேநோய் வந்ததாகப் பொய்யே காட்டி அந்நோய் நம்மால் தீர்ந்திலதெனப் பொய்கூறி இங்கு நமக்கு இகழ்ச்சியுண்டாகத் தம் தமக்கையாரிடத்திற் சென்று சைவராகி நம் சமயத் தெய்வத்தையும் இகழ்ந்துரைத் தனர் என்றதொரு பொய்வழக்கினச் சித்திரித்து வேந்தனிடம் முன்னமே சென்று முறையிடுவதே செய் யத்தக்கதெனத் துணிந்தார்கள்.

இங்ஙனம் முடிவுசெய்துகொண்ட அடிகள் மார கிய அவரெல்லோரும் பல்லவ வேந்தனது தலைநகரில் வந் தடைந்தார்கள். அரண்மனேயினுள்ளே புகுந்து அர