பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23S பன்னிரு திருமு ை வரலாது.

என்னுந் திருக்குறுந்தொகை பாடிக்கொண்டு தில்லைப் பதியை யடைந்தார். அரியானே அந்தணர் தஞ் சிந்தையானே யெனத் தொடங்கும் பெரிய திருத் தாண்டகம் பாடித் திருக்கோயிலுட் புகுந்து தில்லைச் சிற்றம்பலவனே இறைஞ்சிச் செஞ்சடைக் கற்றைமுற் றத் திள நிலாவெறிக்கும்’ என்னும் முதற்குறிப்புடைய திருநேரிசையிணைப்பாடிப் பரவிஞர்.

ஆளுடைய பின்ளேயாரைக் கண்டு மகிழ்தல்

இவ்வாறு திருநாவுக்கரசர் தில்லைச்சிற்றம்பல ஒரே ப் போற்றி மகிழும் நாளில் சீகாழிப்பதியில்ே கவுணியப்பின் ாேயார் மூவாண்டில் உமையம்மையா ாளித்த ஞானப்ப லுண்டு திருஞானசம்பந்த சாய்த் தோடுடைய செவியன்’ எனும் திருநெறிய தமிழ்பாடி எம்மையிதுசெய்தபிரான் இவனன்றே எனத் தம் தந்தையார்க்குக் கைவிரலாற் சுட்டிக் காட்டிய அற் புத நிகழ்ச்சியை அடியார்கள் சொல்லக் கேள்வியுற் ருச். ஆளுடைய பிள்ளேயாரை வணங்க வேண்டு மென்னும் பெருங்காதலால் அப்பொழுதே தில்லேக் கூத்தனே யிறைஞ்சி விடைபெற்று அங்கிருந்து புறப் பட்டுத் திருநாரையூரடைந்து இறைவனைத் தமிழ் மாலேயினுற் போற்றிசைத்துச் சீகாழிப்பதியைச் சென்று சேர்ந்தார்.

சூலேநோயினைத் தந்து சிவபெருமானல் நேரே ஆட்கொள்ளப் பெற்ற திருநாவுக்கரசராகிய பெருந் தகையார் சீகாழிப்ப்தியை நோக்கி வருகின் ருர் எனக் கேள்வியுற்ற ஆளுடைய பிள்ளே யார், அடியார்களுடன் அரசரை எதிர்கொண்டழைத்தனர். திருஞானசம்பந் தரைக் கண்டு அளவிலா ஆர்வமுற்ற திருநாவுக் கரசர், எதிர் சென்று அவருடைய திருவடிகளில் வீழ்ந்து வணங்கினர். ஆளுடைய பிள்ளையார் மலர் போலும் மெல்லிய கைகளால் எடுத்து இறைஞ்சி "அப்பரே என அன்பினல் அழைத்தார். அவரும் அடியேன்” என் ருர். பெருமக்கள் இருவரும் தாங்கள்