பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/455

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

438

பன்னிரு திருமுறை வரலாறு


களேக்கூர்ந்து நோக்குங்கால், நாற்சீரளவுட்பட்டு வரும் அடிகளால்இயன்ற இசைப்பாடல்களேச்சிறுதேவபாணி எனவும் நாற்சீரின் மிக்கு எண் சீரளவும் வரும் அடி களால் இயன்ற இசைப் பாடல்களேப் பெருந்தேவ பாணி எனவும் வழங்குதல் அவர் கருத்தென்பது உய்த் துணரப்படும் தேவாரத் திருப்பதிகங்களாகிய முதல் ஏழு திருமுறைகளிலும் நாற்சீரடி யளவுட் பட்டுச் சிறி யனவாகவும் ஐஞ்சீரடி முதலாக மிக்குவரும் அடிகளைப் பெற்றுப் பெரியனவாகவும் அமைந்த திருப்பாடல்கள் யாவும் தேவதேவனகிய முழுமுதற் கடவுளேப் பரவிப் போற்றிய தெய்வப்பாடல்கள் ஆதலின் அவை யனே த்தும் தேவபாணி என்னும் இசைப்பாவாகக் கொள்ளத்தக்கனவாகும்,

முத்தகம் என்பது, ஒரே பாடலாய்ப் பொருள் முற்றி நிற்கும் இசைப்பாட்டு. நறுமலர்களால் தொடுக்கப் பெற்ற மலர்மாலே போன்று பொருளால் தொடர்புடைய பாமாலேகளாகிய தேவாரத் திருப்பதிகங்களில் உள்ள ஒவ்வொரு திருப்பாடலும் தனித்தனியே பொருள் முற்றி நிற்கும் தன்மையினேயும் உடன் பெற்றிருத்தல் காணலாம்.

வண்ணம் என்பது, பாட்டின் கண்ணே நிகழும் ஒசை விகற்பமாகும். உயிரெழுத்துக்களுள் குறில் நெடில் ஆகிய மாத்திரையளவுபற்றியும் மெய் யெழுத்துக்களுள் வல்லெழுத்து, மெல்லெழுத்து, இடை யெழுத்து ஆகிய இனம் பற்றியும் செய்யுளுக் குரிய அசை, சீர், அடி, தொடை முதலிய பிற உறுப்புக்கள் பற்றியும் செய்யுட்கள் வெவ்வேறு ஒசை நலம் உடை யனவாய்ப் படிப்போர்க்கும் கேட்போர்க்கும் இன்பந் தருவன. இங்ங்னம் ஒதவும் கேட்கவும் சுவை பயக்கும் இனிய ஓசைநலம் வாய்ந்த பாக்கள் வண்ணம் என வழங்கப்பெறும். இவ்வண்ணப் பாக்களே இயற்றமிழ் நூலார் பாஅ வண்ணம் முதலாக முடுகுவண்ணம் ஈருக