பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/462

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 445

புடைய தாய் நாற்சீரடியொத்துவரும் இசைப்பாட் டாகும். திருநாவுக்கரசர் பாடியருளிய திரு விருத்தப் பாடல்கள் யாவும் மண்டிலம் என்னும் இவ்விசைப்பா வகையில் அடங்குவனவாகும்.

இனி, சிந்து என்பது, அடியிரண்டாய்த் தம்முள் அளவொத்து வரும் செய்யுள், மூன்றடியாய்த் தம்மில் அளவொக்கில் திரிபதை எனப்படும். இதனே த்திரிபாதி என வழங்குவர் வீரசோழிய ஆசிரியர். முதலடி, கடையடி , இடையடிகள் குறைந்தும் மிக்கும் வரின் சவலே எனப்படும். நான்கடிகளும் அளவொத்து வருஞ் செய்யுள் சமபாதம் எனப்படும். மேற்குறித்த சிந்து, திரிபதை, சவலே, சமபாத விருத்தம் என்பன, பிற் காலத்தார் வகுத்துரைத்த இயல்பற்றிய யாப்பு விகற் பங்களாகும். இவையாவும் தொல்காப்பியச் செய்யு எளியலின்படி யாட்பினும் பொருளினும் வேறுபட்ட" கொச்சகக் கலியுள்ளும் பண்ணேத் தோற்றுவிக்கும் செய்யுள் வகையாகிய பண்ணத்தியுள்ளும் அடங்கு வனவாம்.

இனி, வடநூல்வழித் தமிழாசிரியர் சிலர் , இத் தமிழ்ச் செய்யுள் வகைகளுக்கு வடமொழி யாப்பிலக் கண மரபை அடியொற்றி லகு குரு என்னும் எழுத் தமைப்பினேக் கொண்டு புதிய இலக்கணங்களேக் கற்பித்துக் கூறியுள்ளார்கள். தமிழில் பிற்காலத்தவர் ஏற்றியுரைத்த இவ்விருத்த இலக்கணம் வடமொழி நூல்களில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. வீரசோழிய ஆசிரியர் தமிழில் ஒரளவு சுருங்கக் கூறியுள்ளார்.

தனிக்குற்றெழுத்தாய் வருவது லகு. குற்ருெற்று, நெடில், நெட்டொற்று ஆக வருவது குரு. குற் றெழுத்து ஈற்றில் நின்ற நிலேயிலும் விட்டிசைத்த நிலே யிலும் குருவாதலும் உண்டு. லகுவுக்கு ஓரலகும் குரு வுக்கு இரண்டலகும் கொள்வர். எனவே இரண்டு