பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/508

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 491

பஞ்சமம் என்னும் பண்ணுக்கு உரியன எனக் கொள்ளு தல் ஏற்புடையதாகும். இப் பதிகங்களில் மூன்று யாப்பு விகற்பங்கள் காணப்படுகின்றன.

பஞ்சமம்

யாப்பு 1.

விரையார் கொன்றையினுய் - விட - முண்ட

மிடற்றினனே

தன ளு தானதை - தன - தான தனதனன.

என வருவது 55-ஆம்பதிகம்.

மேற்காட்டிய யாப்பில் தனணு' என்பது, தன தன’ எனவும் தானன’ எனவும் ஒரெழுத்து மிக்கும், இரண்டாஞ் சீராகிய தானதன என்பது தான தான’ என ஒரு மாத்திரை மிக்கும், நான்காஞ்சீராகிய தான’ என்பது தான ன’ என ஒரெழுத்து மிக்கும், ஐந்தாஞ் சீராகிய தன தன ைஎன்பது தானதான எனவும் வருவது பஞ்சமப் பதிகத்தின் இரண்டாம் யாப்பாகும்.

யாப்பு 2.

இறிையவன் ஈசனெந்தை - இமை - யோர் தொழு

தேத்தநின்ற

தனதன தானதான - தன - தான ன தானதா கு. என வரும். 56 முதல் 62 வரையுள்ள பதிகங்கள் ஒரே யாப்பின. சுந்தரர் அருளிய ஏழாந் திருமுறையில் 79 முதல் 100 வரையுள்ள பஞ்சமப்பதிகங்கள் ஆளுடைய பிள்ளேயார் அருளிய இப் பஞ்சமப் பதிகங்களின் யாப்பினே அடி யொற்றி யமைந்திருந்தல் காணலாம். இயல்வகை யொன்றே பற்றி நோக்குமிடத்து இப் பதிகங்கள் கட்டளைக் கலித்துறை யாப்பில் அமைந் திருத்தல் அறியத்தக்க தாகும்,