பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/651

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

634

பன்னிரு திருமுறை வரலாறு


  • சிந்தை வெள்ளப் புனலாட்டிச்

செஞ்சொன்மாலே படிச்சேர்த்தி

எந்தைபெம்மான் என்னெம்மான்

என்பார் பாவம் நாசமே (4-15-11)

என ஆளுடைய அரசரும்,

  • மந்தம் முழவம் இயம்பும் வளவயல் நாவலாரூரன்

சந்தம் இசையொடும் வல்லார் தாம்புகழெய்துவர்தா மே”

(7–78–11)

என நம்பியாரூரரும் அருளிய திருக்கடைக் காப்புத் தொடர்கள் தேவாரத் திருப்பதிகங்களே இசைதலம் குன்ருதபடி பாடுதல் வேண்டும் எனவும், அங்ங் னம் பாடிப்போற்றுவார் முன்னேத் தீவினையாகிய பாவம் நீங்க இறைவன் திருவருளால் எல்லா நலங்களையும் பெற்று இன்புறுவர் என வும் வற்புறுத்துதல் காணலாம். நன்ருக இசை பாடு தற்கேற்ற குரல்வளம் அமையாத வர்களாயினும் இத்திருப்பதிகங்களேக் கூடிய அளவு இசைநலம் பொருந்தப்பாடி மகிழவேண்டும் என்பதே இசைத் தமிழிலக்கியங்களாக இவற்றைத் திருவாய் மலர்ந்தருளிய பெருமக்களது அருட்குறிப்பாகும்.

“தழங்கெரி மூன் ருேம்புதொழில் தமிழ் ஞானசம்பந்தன்

சமைதத பாடல் வழங்கும் இசை கூடும்வகை பாடுமவர் நீடுலகம்

ஆள்வர்தாமே?’ (1-131-11

எனவரும் திருக்கடைக்காப்பு இங்கு நோக்கத் தக்கதாகும்.