பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/660

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 643

ஞானத்தின் திருவுருவாகிய பிள்ளேயார் அருளிய திருப்பாடல்கள் யாவும், உமையம்மையார் அளித்த திருவருள் ஞான மாகிய பாலடி சிலேப் பருகிய மகிழ்ச்சி நிலேயில் சிவனடியே சிந்திக்கும் திருவுடைய அவரது உள்ளத்திலிருந்து பொங்கி யெழுந்து பொழிந்த உயர் ஞானத் திருமொழிகளாதலின், இயற்கைப் பொருள் களின் எழில் நலங்களேயும் அவற்றிற் பிரிவறத் தோய்ந்து இன் பஞ் செய்யும் இறைவனது திருவருள் வனப்பையும் ஒருங்கே விரித்துரைக்கும் சந்தமலிந்த செந்தமிழ்ச் சொற்களால் இயன்று, உள்ளம் பொருந்தக் கற்போருக்கும் இசை நலம் பொருந்தப் பாடுவோர்க்கும் தெவிட்டாத தீஞ்சுவை யமிழ்தமாகத் தித்திப்பன.

நீர்வள மிகுந்த காழிப் பதியில் தோன்றிய கவுணியப் பிள்ளேயார் இயற்கைக் காட்சியின் எழில் நலத்தில் திளேத்தவர், அவற்றுள் உள் நின்று திகழும் தெய்வத் திருவருளேச் சிந்தையாற் பருகி மகிழும் இயல் பினர். பிள்ளே யார் திருப்பாடலில் நானிலத்து ஐந்திணே வளங்களும் நன்கு புனேந்துரைக்கப் பெற்றுள்ளன.

திருஞானசம்பந்தர் திருவாய் மலர்ந்தருளியன வாகத் தேவார ஏடுகளிற் காணப்படுவன 383 திருப் பதிகங்களே. அவற்றுடன் திருவிடைவாசல் என்ற ஊரில் அமைந்த திருக்கோயிற் கல்வெட்டிலிருந்து வெளிவந்த 'மறியார் கரத் தெந்தை” என்னும் முதற் குறிப்புடைய திருவிடை வாய்த் திருப்பதிகம் ஒன்றை யும் சேர்த்தெண்ணப் பிள்ளேயார் அருளிய திருப்பதி கங்கள் 384 ஆகும். இப்பதிகங்களிலுள்ள திருப் பாடல்கள் 4158 ஆகும்.

ஆளுடைய பிள் ாேயார் திருப்பதிகங்களிற் பெரும் பாலன பதிைெரு பாடல்களால் ஆகியவை. திருப் பிரமபுரத் திருப்பதிகங்களிற் சில, அத்தலத்திற்கு