பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/698

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் ög

தாட்டுத் தொல்பெருஞ் சமயமாகிய சிவநெறியினையும், நாட்டு மக்களால் மதிக்கப்பெறும் நிலேயில் முன்னமே வேரூன்றியிருந்த வேதநெறியினயும் இகழ்தலேயே தமது தொழிலாகக்கொண்டு திரிந்தமைய ல், ஒன்றே குலனும் ஒருவனே தேவனும் என நெடுங்காலமாகத் தமிழ் மக்கள் உள்ள த்தில் நிலைபெற்றிருந்த கடவுட் கொள்கை சிதைவுறும் நிலை யேற்பட்டது தெய்வ வழிபாட்டில் மக்களுக்கிருந்த உறுதியான நம்பிக்கை நெகிழ்ந்து சிதைந்தமையால் த மி ழ் மக்களிற் பலர். உள்ளத்தில் உரனிழந்து உரிமையற்று இந்நாட்டிற் குடிபுகுந்த அயலார்க்கு அஞ்சி அடிமைப்படும் அவல நிலேக்கு உள்ளாயினர். தமிழ்மொழியும் தனது உயர் நிலேயை யிழந்தது. ஆரிய மொழியும் அதன் திரிபாகிய பாகதமொழியும் தமிழ்நாட்டு வழக்கில் இடம்பெறும் நிலே யேற்பட்டது. இந்நாட்டு நிலைமைக்கு ஒவ்வாத அயலார் நடைமுறைகளால் தமிழ் மக்களுடைய சமுதாய வாழ்வும் சிதைவுற்றது.

திருஞான சம்பந்தர்காலத்தில் தமிழ் நாட்டு அரசி யலிற் செல்வ க்குப் பெற்றிருந்தவர் சமணர்களே. அந்நாளில் புத்த மதத்தினர் க்குச் சமணர் க்கிருந்த அளவு செல்வாக்கிருந்ததாகத் தெரியவில்லே. எனவே ஆளுடையபிள்ளையார் சமணர்களோடுதான் வாது செய்யவேண்டியிருந்தது. புறச்சமயத்தார்களால் தமிழ் நாட்டில் ஏற்பட்ட குழப்பநிலைகளைக் கண்டு மனங் கவன்ற காழிப்பிள்ளே யார், சமணர் புத்தர் மேற் கொண்டொழுகும் நடைமுறைகளும் உறுதியற்ற கொள்கைகளும் இவ்வுலக வாழ்வாகிய இம்மையின் பத்திற்கும் பிறப்பற முயலும் பெருநெறியாகிய பேரின்ப வாழ்வுக்கும் இடர்விளைத் தலைக் கண்டார். அவற்றின் தீமைகளைத் தமிழ்நாட்டு மக்கள் அனைவர்க்கும் தெளிவாக எடுத்து ைரத்து மக்களே விழிப்படையச்