பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/795

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. திருக்குறளும் தேவாரத்திருமுறையும்

தேவர் குறளும் திருநான் மறைமுடிவும் மூவர் தமிழும் முனிமொழியுங் - கோவை திருவாசகமும் திருமூலர் சொல்லும் ஒருவாசகமென் றுணர்

என்பது ஒளவையார் அருளிய மெய்ம்மொழியாகும். திருவள்ளுவதேவர் அருளிய திருக்குறளும், திரு நான் மறை முடிவாகிய உபநிடதங்களும், சிவநெறிச் செல் வர்களாகிய திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் முதலிய பெருமக்கள் அருளிய தேவாரம், திருவாசகம், திருக்கோவை, திருமந்திரம் முதவிய திருமுறைகளும், உலகியல் கூறி மெய்ப்பொருள் இதுவென உணர்த்தும் நெறியில், ஒத்த கருத்துடைய மெய்ந்நூல்கள் என்பது மேற் குறித்த நல்வழிச் செய்யுளின் கருத்தாகும்.

அறநெறியில் நின்று பொருளேயீட்டி அப்பொரு ளால் இன்பம் துகரும் மக்களது வாழ்க்கை முறையினே மூன்றன் பகுதி எனக் குறிப்பிடுவர் தொல்காப்பியர். அவ்வாசிரியர் குறித்தவண்ணம் மக்களது நல் வாழ்க்கை முறையினே அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என முப்பாலாக வகுத்து விளக்குவது, தெய்வப்புலவர் அருளிய திருக்குறளாகும். உலகப் பொதுமறையாக விளங்கும் இந் நூல், நாடு, மொழி, சமயம், இனம் முதலிய வேற்றுமையின்றி மக்கட் குலத் தார் அனே வரும் உவந்தேற்றுக்கொள்ளுந் தகுதி வாய்த்த சிறந்த ஒழுக்க நெறியினே அறிவுறுத்துவதா கும் ஆகவே தமிழகத்தில் வாழ்ந்தசான் ருேர் அனேவ கும் சமய வேறுபாடின்றித் திருக்குறளேத் தமக்குரிய மறைநூலாக மதித்துப் போற்றியுள்ளார்கள். செம்புலச் செல்வர்களாகிய தேவார ஆசிரியர்கள் மூவரும்