பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/796

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளும் தேவாரத்திருமுறையும் 77g

இறைவனது பொருள் சேர் புகழை விரித்துப் போற்றும் முறையில் திருவாய்மலர்ந்தருளிய தேவாரத் திருப் பதிகங்களில் திருவள்ளுவர் அருளிய திருக்குறட் கருத்துக்கள் ஆங்காங்கே சிறப்பாக இடம் பெற்றுள் öss GTI »

இவ்வுலக நிகழ்ச்சியைக் கூர்ந்து நோக்குங்கால், இவ்வுலகம் ஓர் ஒழுங்கு நிலேயில் நின்று செயற்படுதல் இனிது புலகுைம். இத்தகைய நியதியொடு நிகழும் செயற்பாட்டுக்கு நிமித்த காரணமாய் உடன் நின்று இயக்கி நிற்கும் பேராற்றல் வாய்த்த முழுமுதற்பொருள் ஒன்று இருத்தல் வேண்டும் என்பது அறிஞரனே வர்க் கும் ஒப்ப முடிந்த உண்மையாகும். இங்ங்னம் எல்லார்க்கும் புலகுைம் இவ்வுலக நிகழ்ச்சியினே அடிப் படையாகக் கொண்டே, காணப்படாது உயிர்க்குயி ராய் உடனின்றியக்கியருளும் முழுமுதற் பொருளாகிய கடவுளது உண்மையினே உணர்த்தக் கருதிய திரு வள்ளுவர்,

  • அகர முதல எழுத்தெல்லாம் ; ஆதி

பகவன் முதற்றே யுலகு ’

என அருளிச் செய்தார் . “ எழுத்துக்களெல்லாம் தம்மை உடனின்று செலுத்தும் அகர வொலியினே த் தமக்கு முதலாக உடையன; அதுபோல உலகமும் தன்னே உடனின்று இயக்கி நிற்கும் ஆதிபகவணுகிய இறைவனே த் தனக்கு முதலாக உடையது” என்பது இதன் பொருள். இங்கு உலகு என்றது, உடம்பொடு காணப்படும் உயிர்த் தொகுதியின. ஓர் வரையறை யுடன் காணப்படும் இவ்வுலக நிகழ்ச்சியைக் கொண்டு இதற்கு நிமித்த காரணமாகிய மு கற்பொருள் ஒன் லுண்டு எனத் துணிய வெண்டியிருத்தலால் ' உலகு ஆதி பகவனே முதலாக உடையது” என உலகின் மேல்